ஹீரோக்கு ஸ்கோப் இல்லனு.. பிளாக்பஸ்டர் கதையை மிஸ் செய்த விஜய்.. அத இந்த ஹீரோ நடிச்சு 200 நாள் ஓடிச்சு !

Sandakozhi film to be acted by vijay but he missed the script

தனக்கென்ற தனி அடையாளத்தை கொண்டு உச்ச நட்சத்திர அந்தஸ்த்தை கொண்டு விளங்கி வருபவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் துப்பாக்கி, கத்தி, மெர்சல், தெறி, பிகில் போன்ற படங்கள் இவருக்கு வெற்றி வாகையை சூடி வந்த நிலையில், மாஸ்டர் மற்றும் தற்போது வெளியான பீஸ்ட் போன்ற திரைப்படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெற்று தரவில்லை.

Sandakozhi film to be acted by vijay but he missed the script

பீஸ்ட் படம் தோல்வியை சந்தித்தாலும் வசூலில் நல்ல லாபம் பெற்றதாக கூறப்படுகிறது. இவர் நடிப்பில் உருவாகவிருந்த நிறைய கதைகள் சில பல காரணங்களால் கைவிடப்பட்டு வேறு நடிகர்கள் நடித்து வெற்றி பெற்றது குறித்து அவ்வப்போது தகவல் வெளியாவது வழக்கம்.

Sandakozhi film to be acted by vijay but he missed the script

இந்நிலையில், விஜய் ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை தவறவிட்டுயுள்ளார் என்பதை சமீபத்தில் மனோபாலா மற்றும் லிங்குசாமி இருவரும் ஒரு யூடியூப் சேனலில் கலந்துரையாடலில் பேசியுள்ளனர். அதில், லிங்குசாமி விஜயிடம் தனது கதையை கூறிய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

Sandakozhi film to be acted by vijay but he missed the script

லிங்குசாமி கதை கூறும்போது முதல் பாதியை கேட்ட விஜய் இப்படம் வேண்டாம் எனத் தடுத்துவிட்டாராம். அந்த படத்தில் அப்பா கதாபாத்திரம் வலுவாக இருந்ததால் ஹீரோவுக்கு ஸ்கோப் இருக்காது என்பதால் என விஜய் மறுத்து விட்டாராம்.

Sandakozhi film to be acted by vijay but he missed the script

ஆனால் அதன்பிறகு விஷால் நடித்து உருவான அப்படம்தான் சண்டக்கோழி. இப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து, தேவி தியேட்டரில் மட்டும் கிட்டத்தட்ட 225 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியது. விஷாலின் திரை வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த படம் சண்டக்கோழி தான்.

Sandakozhi film to be acted by vijay but he missed the script

இந்நிலையில் அதன்பிறகு ஒரு ஹோட்டலில் லிங்குசாமி விஜய்யை சந்தித்த போது, லிங்குசாமி இந்த கதையை வேண்டான்னு சொல்லிட்டீங்களே சார் எனக் கேட்டுள்ளார்.

Sandakozhi film to be acted by vijay but he missed the script

அதற்கு விஜய், படம் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள், விஷால் போன்ற ஒரு நல்ல நடிகர் தான் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பது சரியான தேர்வு என கூறியுள்ளார். மேலும் தமிழ் சினிமாவிற்கு இப்படி ஒருவர் வரணும்னு இருக்கு என புகழ்ந்துள்ளார்.

Sandakozhi film to be acted by vijay but he missed the script

Share this post