சண்டைக்காட்சியில் படுகாயம்.. வலியால் சுருண்டு விழுந்து கதறிய சம்யுக்தா ஹெக்டே.. Viral Video
ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட் அடித்த திரைப்படம் கோமாளி. இப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. மேலும், பப்பி, வாட்ச்மேன், தேள், மன்மத லீலை உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
கோமாளி படத்தின் மூலம் வரவேற்பை பெற்ற இவர், சமூகவலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருபவர். இந்த ஊரடங்கு முதல், தனது உடற்பயிற்சி வீடியோ, கவர்ச்சி போட்டோ போன்றவற்றை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். தற்போது, ராணா, க்ரீம் உள்ளிட்ட 2 படங்களில் நடித்து வருகிறார்.
அறிமுக இயக்குனர் அபிஷேக் பசந்த் இயக்கும் கிரீம் என்ற கன்னட படத்தில் நடித்து வரும் சம்யுக்தா ஹெக்டேக்கு ஷூட்டிங்கில் காயம் ஏற்பட்டு இருப்பது கன்னட சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சம்யுக்தா ஸ்டண்ட் பயின்றவர் என்பதால் அந்த படத்தின் சண்டை காட்சிகளில் அவரே நடித்து இருக்கிறார்.
ஒரு முக்கிய சண்டை காட்சியில் ரிஸ்க் அதிகம் என்பதால் டூப் பயன்படுத்தலாம் என இயக்குனர் கூறி இருக்கிறார். ஆனால் சம்யுக்தா அவரே நடிப்பதாக கூறி அந்த காட்சியில் நடித்து இருக்கிறார். அப்போது அவரது காலில் காயம் ஏற்பட்டு கீழே விழுந்து அவர் வலியால் துடித்து இருக்கிறார். அதன் பின் சம்யுக்தாவை உடனே அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்று இருக்கிறார்கள்.
அவரது காலில் ligament tear ஏற்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருக்கின்றனர். அதற்காக சம்யுக்தா சிகிச்சை எடுத்து வருகிறார். இதனால், இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.