மெர்சல் பட ஷூட்டிங்கில் அட்லீ - சமந்தா இடையே ஏற்பட்ட பிரச்சனை.. ஜவானை மறுத்த சமந்தா..

Samantha was the first choice for atlee direct jawaan movie

சில படங்கள் இயக்கத்திலேயே முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மாறியவர் அட்லீ. இவர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் அவர்களின் அசிஸ்டென்ட் ஆக எந்திரன், நண்பன் உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ளார்.

Samantha was the first choice for atlee direct jawaan movie

தனது முதல் படமான ராஜா ராணி படத்தில் ஆரியா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சத்யராஜ் உள்ளிட்ட பெரிய பிரபலங்களை வைத்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தார்.

Samantha was the first choice for atlee direct jawaan movie

அடுத்த படத்திலேயே விஜய் உடன் தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து 3 படங்களை விஜய் அவர்களுக்கு வெற்றி படங்களாக அமைத்து தந்தார். அதன்படி தற்போது, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானின் படத்தை இயக்க பாலிவுட் பறந்து விட்டார் அட்லீ.

Samantha was the first choice for atlee direct jawaan movie

அட்லி மற்றும் விஜய் கூட்டணியில் உருவாகிய திரைப்படம் ‘பிகில்’. இதில் நடிகர் விஜய் கால்பந்து வீரராகவும், தந்தையாகவும் இரு வேடங்களில் நடித்திருந்தார். இதில் வயதான தோற்றத்தில் ராயப்பனாக விஜய் வரும் கதாபாத்திரம், பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்தது.

Samantha was the first choice for atlee direct jawaan movie

OTT தளமான அமேசான் ப்ரைம், ராயப்பன் கதையை வைத்து மட்டும் ஒரு முழு படம் உருவாகினால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள் என ட்வீட் செய்யவே, அதற்கு அட்லீ, ராயப்பன் பாணியில் “செஞ்சிட்டா போச்சு” என கூறியிருந்தார். இதனால், தளபதி68 அட்லீ தான் இயக்கப்போகிறாரா என்ற பல தகவல்கள் இணையத்தில் உலா வருகிறது.

Samantha was the first choice for atlee direct jawaan movie

இந்நிலையில், ஷாருக்கான் வைத்து அட்லீ திரைப்படம் இயக்குவது குறித்து பல தகவல் வெளியானது. இன்று, ஷாருக்கானின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லி ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், அட்லீ ஷாருக்கானை வைத்து படம் இயக்குவது குறித்தும், படத்தின் பெயர் ஜவான் எனவும் வீடியோவுடன் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Samantha was the first choice for atlee direct jawaan movie

வித்தியாசமான லுக்கில் ஷாருக்கான் இருப்பது, அந்த தோரணை அனைத்தும், பார்க்கையில் இதுவும் அட்லீக்கு பிளாக்பஸ்டராக அமையும் என தெரிகிறது. மேலும், படம் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இதன் நடுவே, டீசரில் ஷாருக்கான் முகம் முழுவதும் பேண்டேஜ் சுற்றியபடி நடித்துள்ளார். இது 1990ம் ஆண்டு வெளியான டார்க் மேன் எனும் ஹாலிவுட் படத்தில் இருப்பது போல இருப்பதாக நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். இந்த படமும் காப்பி என சொல்லப்படுவது அட்லீ ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samantha was the first choice for atlee direct jawaan movie

இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இப்படத்திற்கு முதலில் நடிகையாக நடிக்கவிருந்தது சமந்தா தானாம். சமந்தாவுக்கு முதலில் ‘ஜவான்’ வாய்ப்பு கொடுக்கப்பட்டதாகவும், அவர் அதை நிராகரித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இந்த வாய்ப்பு நயன்தாராவுக்கு வழங்கப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது.

Samantha was the first choice for atlee direct jawaan movie

முன்னதாக அட்லீ இயக்கத்தில் வெளியான தெறி, மெர்சல் உள்ளிட்ட படங்களில் விஜய் ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். இதில் மெர்சல் படப்பிடிப்பிடிப்பின் போது அட்லீ - சமந்தா இடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாகவே அவர் இதில் நடிக்க மறுத்து விட்டதாக தகவல் கிசுகிசுக்கப்படுகிறது.

Samantha was the first choice for atlee direct jawaan movie

Share this post