சினிமாவில் நடிப்பதற்கு முன் விஜய் டிவி பிரபல தொகுப்பாளினியுடன் சமந்தா.. வைரல் போட்டோ இதோ!

samantha took photo with popular vj before started doing movies and acting

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. கவுதம் மேனனின் Ye Maaya Chesave என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, நீதானே எந்தன் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, தெறி, அஞ்சான், 24, மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.

samantha took photo with popular vj before started doing movies and acting

தெலுங்கில், ஓ பேபி, ரங்கஸ்தலம், மகாநதி போன்ற பல வெற்றி திரைப்படங்களில் முன்னணி தெலுங்கு நடிகர்களுடனும் நடித்துள்ளார். மையோசிட்டிஸ் பிரச்சனைக்கு சிகிச்சை எடுத்து கொண்டே யசோதா டப்பிங் போன்ற பணிகளையும் ப்ரோமோஷன் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். இதுகுறித்து சமந்தா வெளியிட்ட புகைப்படம் வைரலானது.

samantha took photo with popular vj before started doing movies and acting

தற்போது மயோசிடிஸ் என்கிற அரியவகை நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வரும் நடிகை சமந்தாவுக்கு, இப்படத்தின் வெற்றி புத்துணர்ச்சியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில், ஒரு கையில் ஊசியுடன் சமந்தா ஒர்க் அவுட் செய்யும் புகைப்படத்தையும் வெளியிட்டார். இதனை பார்த்து ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வந்தனர்.

samantha took photo with popular vj before started doing movies and acting

இந்நிலையில், கடந்த வாரம், நடிகை சமந்தா உடல்நிலை மோசமடைந்ததால் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால், சமந்தாவின் செய்தி தொடர்பாளர் இந்த தகவலை மறுத்ததோடு, சமந்தா தன்னுடைய ஹைதராபாத் வீட்டில் ஓய்வு எடுத்து வருவதாக தெரிவித்திருந்தார்.

samantha took photo with popular vj before started doing movies and acting

மேலும், சமந்தாவின் உடல்நிலை நடக்க முடியாத அளவில் இருப்பதாக சொல்லப்பட்டது. அவரால் சிறிது தூரம் கூட நடக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. சமந்தாவிற்கு ஆயுர்வேத சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்ட நிலையில், இதை தொடர்ந்து சமாந்த மேல் சிகிச்சைக்காக விரைவில் வெளிநாடு செல்ல உள்ளாராம்.

samantha took photo with popular vj before started doing movies and acting

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்த சமந்தா, நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017ல் திருமணம் செய்து கொண்டார். ஒருக்கட்டத்தில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து நாக சைதன்யாவை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

samantha took photo with popular vj before started doing movies and acting

இந்நிலையில், நடிகை சமந்தா சினிமா படங்களில் நடிக்க வருவதற்கு முன் நகைக்கடை விளம்பரங்களில் நடித்து வந்துள்ளார். இந்த விளம்பரத்தில் சமந்தாவுடன் இணைந்து பிரபல விஜய் டிவி தொகுப்பாளினிகளில் ஒருவரான ரம்யாவுடன் நடித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. நானும் சமந்தாவும் நல்ல நண்பர்கள் என்று ரம்யா சமீபத்திய பேட்டி ஒன்றிலும் கூறியுள்ளார்.

samantha took photo with popular vj before started doing movies and acting

Share this post