ஒரு பக்கம் மோசமான உடல்நிலை.. மறுபக்கம்.. 'யசோதா' படத்துக்கு தடை.. அதிர்ச்சியில் சமந்தா!

samantha starred yasoda movie stopped from ott release due to hospital notice

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. கவுதம் மேனனின் Ye Maaya Chesave என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, நீதானே எந்தன் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, தெறி, அஞ்சான், 24, மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.

samantha starred yasoda movie stopped from ott release due to hospital notice

தெலுங்கில், ஓ பேபி, ரங்கஸ்தலம், மகாநதி போன்ற பல வெற்றி திரைப்படங்களில் முன்னணி தெலுங்கு நடிகர்களுடனும் நடித்துள்ளார். மையோசிட்டிஸ் பிரச்சனைக்கு சிகிச்சை எடுத்து கொண்டே யசோதா டப்பிங் போன்ற பணிகளையும் ப்ரோமோஷன் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். இதுகுறித்து சமந்தா வெளியிட்ட புகைப்படம் வைரலானது.

samantha starred yasoda movie stopped from ott release due to hospital notice

நடிகை சமந்தா நடிப்பில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ள திரைப்படம் யசோதா. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் வாடகைத் தாயாக நடித்துள்ளார் சமந்தா. ஹரி மற்றும் ஹரீஷ் ஆகியோர் இணைந்து இயக்கி உள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்து உள்ளார்.

samantha starred yasoda movie stopped from ott release due to hospital notice

சமந்தா உடன் நடிகை வரலட்சுமி சரத்குமாரும் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் ரிலீசாகி உள்ளது. சமூக வலைதளங்களில் தொடர்ந்து பாசிடிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. தற்போது மயோசிடிஸ் என்கிற அரியவகை நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வரும் நடிகை சமந்தாவுக்கு, இப்படத்தின் வெற்றி புத்துணர்ச்சியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

samantha starred yasoda movie stopped from ott release due to hospital notice

சமீபத்தில், ஒரு கையில் ஊசியுடன் சமந்தா ஒர்க் அவுட் செய்யும் புகைப்படத்தையும் வெளியிட்டார். இதனை பார்த்து ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வந்தனர். இந்நிலையில், தற்போது நடிகை சமந்தா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெலுங்கு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

samantha starred yasoda movie stopped from ott release due to hospital notice

அவருக்கு உடல்நிலை மோசமடைந்ததால் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக் கூறப்படுகிறது. இருப்பினும் சமந்தா தரப்பில் இருந்து இதுகுறித்த எந்தவித தகவலும் வெளியிடப்படவில்லை. இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் அவர் விரைவில் நலம்பெற வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

samantha starred yasoda movie stopped from ott release due to hospital notice

இந்நிலையில், இன்னொரு அதிர்ச்சி சம்பவம் நடிகை சமந்தாவை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அது என்னவென்றால், அவர் நடிப்பில் கடந்த நவம்பர் 11ம் தேதி திரையரங்கில் ரிலீசாகி வெற்றிபெற்ற யசோதா திரைப்படத்தை ஓடிடி-யில் ரிலீஸ் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் வாடகைத் தாய் முறை பற்றி விவாதிக்கப்பட்டு இருந்தது.

samantha starred yasoda movie stopped from ott release due to hospital notice

இப்படம் முழுக்க ஐதராபாத்தில் உள்ள EVA என்கிற மருத்துவமனையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. அதில் தங்கள் மருத்துவமனையை தவறாக சித்தரித்துள்ளதாக கூறி அம்மருத்துவமனை நிர்வாகம் தொடுத்த வழக்கின் அடிப்படையில் தான் இப்படத்தை ஓடிடி ரிலீஸ் செய்ய தடைவிதிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அடுத்தடுத்த அதிர்ச்சி சம்பவங்கள் நடிகை சமந்தாவை மட்டுமின்றி அவரது ரசிகர்களையும் அப்செட் ஆக்கி உள்ளது.

Share this post