இவ்ளோ கவலையா.. ஆளே மெலிந்து.. பாக்கவே கஷ்டமா இருக்கு.. சமந்தாவின் Latest Video.. ரசிகர்கள் ஷாக்
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. கவுதம் மேனனின் Ye Maaya Chesave என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, நீதானே எந்தன் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, தெறி, அஞ்சான், 24, மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் முன்னணி தெலுங்கு நடிகர்களுடனும் நடித்து வரும் இவர், பிரபல நடிகையாக வலம் வருகிறார். தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்த சமந்தா, நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017ல் திருமணம் செய்து கொண்டார். ஒருக்கட்டத்தில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து நாக சைதன்யாவை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
மையோசிட்டிஸ் என்ற பிரச்சனையால் அவதிப்பட்டு வரும் சமந்தா, தற்போது அதற்கு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், சமந்தாவிற்கு ஆயுர்வேத சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்ட நிலையில், இதை தொடர்ந்து சமாந்த மேல் சிகிச்சைக்காக விரைவில் வெளிநாடு செல்ல உள்ளாதாக சொல்லப்பட்டது.
அவரது உடல்நிலை தற்போது தேறி வருவதாக கூறப்பட்டாலும், அவர் புதிய படங்களில் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை என்றும் ஏற்கனவே ஒப்பந்தித்த படங்களை மட்டும் முடித்து விட்டு சினிமாவுக்கு ஒரு நீண்ட இடைவெளி விட திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் வெளியான தகவலின் படி சமந்தாவின் உடல்நிலை மிகவும் மோசமாகிக் கொண்டே செல்வதாகவும், எதிர்பார்த்ததை விட சிகிச்சைக்கான நாட்கள் அதிகரித்து கொண்டே செல்வதாக கூறப்பட்டது. இந்நிலையில், சமந்தா மும்பை ஏர்போர்ட்டில் நடந்து வந்த போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியாகி உள்ளது.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் மாடர்ன் உடையில் சமந்தா வந்துள்ளார். இந்த புகைப்படத்தில் இவர் பார்ப்பதற்கு, மிகவும் மெலிந்து காணப்படுகிறார். முகத்தில் சிரிப்பின்றி சோகமாக இருக்கிறார் இந்த புகைப்படங்கள் தான் வைரலாகி வருகிறது.
#SamanthaRuthPrabhu papped at Mumbai airport today.@Samanthaprabhu2 #Samantha pic.twitter.com/5z4V36t1Q7
— Suresh Kondi (@SureshKondi_) January 6, 2023