விக்கி - நயன் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றது குறித்து சமந்தா சொன்ன ‘நச்’ கருத்து
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. கவுதம் மேனனின் Ye Maaya Chesave என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, நீதானே எந்தன் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, தெறி, அஞ்சான், 24, மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.
தெலுங்கில், ஓ பேபி, ரங்கஸ்தலம், மகாநதி போன்ற பல வெற்றி திரைப்படங்களில் முன்னணி தெலுங்கு நடிகர்களுடனும் நடித்துள்ளார். ஒரு சில படங்களில் ஒன்றாக நடித்ததன் மூலம் ஏற்பட்ட காதலால் நாகார்ஜுனா மற்றும் அமலா அவர்களின் மூத்த மகனான நடிகர் நாகசைதன்யா அவர்களை திருமணம் செய்து கொண்டார்.
2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்கள், ஸ்வீட் ஜோடியாக வலம் வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் சுமூகமாக பிரிந்து விட்டனர். விவாகரத்திற்கு பின்னர், திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ள சமந்தாவின் ஊ சொல்றியா மாமா பாடல் செம ஹிட் அடித்தது. மேலும், திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமந்தா - நாகசைதன்யா ஜோடி மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரின் விவாகரத்துக்கு என்ன காரணம் என்பது குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்த நிலையில், இருவருமே இது குறித்து வெளிப்படையாக கூறவில்லை. தொடர்ந்து இருவரும் தங்களது நடிப்பு பயணத்தில் ஈடுபாடு காட்டி வந்தனர்.
அந்த வகையில், சமந்தா நடிப்பில், நவம்பர் 11ம் தேதி, ‘யசோதா’ திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும் மையோசிட்டிஸ் பிரச்சனைக்கு சிகிச்சை எடுத்து கொண்டே அதற்கான டப்பிங் போன்ற பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். இதுகுறித்து சமந்தா வெளியிட்ட புகைப்படம் வைரலானது.
யசோதா படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால், உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் நடிகை சமந்தா, தற்போது புரமோஷன் பணிகளிலும் பிசியாக இயங்கி வருகிறார். அந்த வகையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் வாடகைத்தாய் முறை குறித்து தங்களது நிலைப்பாடு என்ன என நடிகை சமந்தாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதுமட்டுமின்றி தற்போது தமிழ்நாட்டில் வாடகைத் தாய் முறை தான் ஹாட் டாப்பிக்காக உள்ளது. நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி அந்த முறையில் குழந்தை பெற்றுக்கொண்டதால், இந்த விவகாரம் குறித்து தெரிந்துகொள்ள மக்கள் ஆர்வமாக உள்ள சமயத்தில் சமந்தா நடிப்பில் இப்படி ஒரு படம் வருவது பலருக்கும் ஆச்சர்யத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், அதுகுறித்து நடிகை சமந்தா கூறியதாவது : “வாடகைத் தாய் என்பது தமிழ்நாட்டில் ஹாட் டாப்பிக்காக இருப்பதனால் யசோதா படம் பண்ணவில்லை. சில வருடங்கள் முன்னரே நான் இப்படத்தில் நடித்து முடித்துவிட்டேன். மேலும் அவ்வாறு குழந்தை பெற்றுக்கொள்வது மகிழ்ச்சியை தந்தால், அதில் தவறில்லை. அதுமட்டுமின்றி இதன்மூலம் படத்துக்கும் இலவசமாக விளம்பரம் கிடைத்துள்ளது” என நடிகை சமந்தா அந்த பேட்டியில் கூறி உள்ளார்.