கண்களில் ஊசி..? நிற்க.. நடக்க கூட தள்ளாட்டம்.. கலங்க வைக்கும் சமந்தாவின் மயோசிடிஸ் நோய் பாதிப்பு..!

samantha shares about her condition and treatment in recent interview

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. கவுதம் மேனனின் Ye Maaya Chesave என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, நீதானே எந்தன் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, தெறி, 24, அஞ்சான், மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.

samantha shares about her condition and treatment in recent interview

தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் முன்னணி தெலுங்கு நடிகர்களுடனும் நடித்து வரும் இவர், பிரபல நடிகையாக வலம் வருகிறார். தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்த சமந்தா, நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017ல் திருமணம் செய்து கொண்டார். ஒருக்கட்டத்தில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து நாக சைதன்யாவை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

samantha shares about her condition and treatment in recent interview

தற்போது சாகுந்தலம் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள இவர், அதற்கான ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதற்கு நடுவே, மையோசிட்டிஸ் என்ற பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த சமந்தா, தற்போது அதற்கு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். அவரது உடல்நிலை தற்போது தேறி வருவதாக கூறப்படுகிறது.

samantha shares about her condition and treatment in recent interview

அவர் புதிய படங்களில் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை என்றும் ஏற்கனவே ஒப்பந்தித்த படங்களை மட்டும் முடித்து விட்டு சினிமாவுக்கு ஒரு நீண்ட இடைவெளி விட திட்டமிட்டிருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

samantha shares about her condition and treatment in recent interview

தற்போது, மயோசிடிஸ் நோயினால் தான் சந்தித்த பிரச்சனைகள் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய சமந்தா, எலும்புகள் பலவீனமாகி சோர்ந்து விட்டேன். சில நாட்கள் படுக்கையில் இருந்து எழுந்தரிக்க கூட முடியவில்லை அந்த அளவிற்கு சிரமமாக இருந்தது. மேலும் கடுமையான ஒற்றைத் தலைவலி பாதிப்பு இருந்ததால் சாதாரணமான செயலைகளை செய்வது கூட கடினமாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.

samantha shares about her condition and treatment in recent interview

ஒரு நாள் ஒல்லியாகவும், ஒரு நாள் குண்டாகவும் இருக்கிறேன். கண்களில் ஊசி குத்துவது போன்ற வலியுடன் காலை படுக்கையில் இருந்து எழுவாராம். இதனால் கண்களில் கடுமையான வலி, கண்கள் வீங்கி சில நாள்கள் மோசமாக விடியும். கடந்த 8 மாதங்களாக இப்படி அவதியுறுவதாக சமந்தா பேட்டியில் கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் தங்கள் ஆறுதலை கூறி வருகின்றனர்.

Share this post