நடிகை சமந்தாவிற்கு 2வது திருமணமா? அதுவும் மாப்பிள்ளை இவர் தானா ? இணையத்தில் தீயாய் பரவும் தகவல் !
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. கவுதம் மேனனின் Ye Maaya Chesave என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, நீதானே எந்தன் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, தெறி, அஞ்சான், 24, மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.
தெலுங்கில், ஓ பேபி, ரங்கஸ்தலம், மகாநதி போன்ற பல வெற்றி திரைப்படங்களில் முன்னணி தெலுங்கு நடிகர்களுடனும் நடித்துள்ளார். ஒரு சில படங்களில் ஒன்றாக நடித்ததன் மூலம் ஏற்பட்ட காதலால் நாகார்ஜுனா மற்றும் அமலா அவர்களின் மூத்த மகனான நடிகர் நாகசைதன்யா அவர்களை திருமணம் செய்து கொண்டார்.
2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்கள், ஸ்வீட் ஜோடியாக வலம் வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக சில நாட்களுக்கு முன் இருவரும் சுமூகமாக பிரிந்து விட்டனர். விவாகரத்திற்கு பின்னர், திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ள சமந்தாவின் ஊ சொல்றியா மாமா பாடல் செம ஹிட் அடித்தது. மேலும், திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.
நாக சைதன்யாவும் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வந்த நிலையில், நடிகர் நாக சைதன்யா இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருவதாக தகவல் வெளியானது. ஆனால், அந்த தகவலை நிராகரிக்கும் வகையில் நாக சைதன்யா விளக்கம் அளித்திருந்தார். அதாவது, சமந்தாவுக்கும், இவருக்கும் இன்னும் விவாகரத்து நடக்கவில்லை, வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதாக கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
எத்தனை நடந்தாலும், சமந்தா - நாக சைதன்யா அவர்களின் விவாகரத்து குறித்த காரணம் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில், தற்போது நடிகை சமந்தா 2வது திருமணம் செய்துகொள்ளபோவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஃபேமிலி மேன் 2 படப்பிடிப்பின் போது சமந்தாவிற்கு இந்த காதல் மலர்ந்ததாகவும், அவருடைய காதலர் பிடவுனை சேர்ந்த ஒருவர் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மையானது என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.