கதீஜாவிற்கு கிடைத்த ரெஸ்பான்ஸ்.. ஸ்பெஷல் வீடியோ பதிவிட்ட சமந்தா..

Samantha latest video thanking for kaathuvaakula rendu kadhal

போடா போடி, நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபலம் ஆனவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஒன்று சேர்ந்து முக்கோண காதல் கதை வடிவில் உருவாகியுள்ள திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல், இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

Samantha latest video thanking for kaathuvaakula rendu kadhal

இப்படத்தில் இருந்து வெளியான 2 2 2, நான் பிழை உள்ளிட்ட பாடல்கள் இளசுகளின் ரிங்டோனாக மாறியுள்ளது. இதில் khatija வாக சமந்தா, கண்மணியாக நயன், மற்றும் ராம்போ வாக விஜய் சேதுபதி நடித்துள்ளனர். R’anjankudi A’nbarasu M’urugesa B’oopathy O’hoondhiran என்பதின் சுருக்கமே ராம்போ.

Samantha latest video thanking for kaathuvaakula rendu kadhal

இன்று ஏப்ரல் 28ம் தேதி இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. காதல், செண்டிமெண்ட், டைலாக் டெலிவரி, பாசம், நகைச்சுவை என அனைத்திலும் ஸ்கோர் செய்கிறார். முகம் சுளிக்கும் அளவிற்கு காட்சிகள் எதுவும் வைக்காமல், அழகாக மூவரின் காதல் கதையை கையாண்டுள்ளார்.

Samantha latest video thanking for kaathuvaakula rendu kadhal

படம் ரிலீஸ் ஆன சமயம் இங்கில்லாமல், காஷ்மீர் ஷூட்டிங் காக சமந்தா வெளியூரில் உள்ளார். இந்நிலையில், சமந்தா க்யூட் வீடியோவை ஒன்றை வெளியிட்டுள்ளார். காத்துவாக்குல ரெண்டு காதல் கதீஜாவிற்கு நீங்கள் கொடுத்த அன்பிற்கு நன்றி. நீங்கள் அனுப்பிய மெசேஜ், வாழ்த்துக்கள், ட்வீட் எல்லாத்துக்கும் நன்றி என சமந்தா தெரிவித்துள்ளார்.

Share this post