முழுமையாக மாறி போன சமந்தாவின் முகம்.. புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்

samantha face got changed after treatment fans got shocked

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. கவுதம் மேனனின் Ye Maaya Chesave என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, நீதானே எந்தன் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, தெறி, அஞ்சான், 24, மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.

samantha face got changed after treatment fans got shocked

தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் முன்னணி தெலுங்கு நடிகர்களுடனும் நடித்து வரும் இவர், பிரபல நடிகையாக வலம் வருகிறார். தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்த சமந்தா, நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017ல் திருமணம் செய்து கொண்டார். ஒருக்கட்டத்தில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து நாக சைதன்யாவை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

samantha face got changed after treatment fans got shocked

மையோசிட்டிஸ் என்ற பிரச்சனையால் அவதிப்பட்டு வரும் சமந்தா, தற்போது அதற்கு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், சமந்தாவிற்கு ஆயுர்வேத சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்ட நிலையில், இதை தொடர்ந்து சமாந்த மேல் சிகிச்சைக்காக விரைவில் வெளிநாடு செல்ல உள்ளாதாக சொல்லப்பட்டது.

samantha face got changed after treatment fans got shocked

அவரது உடல்நிலை தற்போது தேறி வருவதாக கூறப்பட்டாலும், அவர் புதிய படங்களில் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை என்றும் ஏற்கனவே ஒப்பந்தித்த படங்களை மட்டும் முடித்து விட்டு சினிமாவுக்கு ஒரு நீண்ட இடைவெளி விட திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

samantha face got changed after treatment fans got shocked

சமீபத்தில் வெளியான தகவலின் படி சமந்தாவின் உடல்நிலை மிகவும் மோசமாகிக் கொண்டே செல்வதாகவும், எதிர்பார்த்ததை விட சிகிச்சைக்கான நாட்கள் அதிகரித்து கொண்டே செல்வதாக கூறப்பட்டது. இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பின்னர் சமந்தா, ஒர்கவுட் செய்யும் வீடியோ வெளியானது.

samantha face got changed after treatment fans got shocked

இதனை பார்த்து சந்தோஷத்தில் இருந்த ரசிகர்களுக்கு தற்போது அவருடைய புகைப்படம் அதிர்ச்சியை தந்துள்ளது. அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் அவரின் முகம் முழுமையாக மாறி இருப்பதை காண முடிகிறது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

samantha face got changed after treatment fans got shocked

Share this post