குஷி படத்தில் சமந்தாவா ? வெளியான தகவல்.. ஷாக் ஆகாதீங்க.. இது விஷயமே வேற !

Samantha and vijay devarakonda movie to be titled as kushi

தற்போது தமிழ் திரையுலகில் எதிர்பார்ப்பை கூட்டி தனது படத்திற்கான தனி அந்தஸ்தை பெற்றவர் நடிகர் விஜய். என்னதான் படம் கலவையான விமர்சனங்கள் பெற்றாலும், ரசிகர்கள் கவனத்தை ஈர்ப்பதில் தவறுவதே இல்லை. அந்த அளவிற்கு, விஜய் நடித்த படங்கள் தற்போது எத்தனை முறை போட்டாலும் ரசித்து ஆரவாரம் கூட்டும் திரைப்படங்கள் நிறைய உள்ளன.

Samantha and vijay devarakonda movie to be titled as kushi

அப்படி மீம்ஸ், காமெடி என அவ்வப்போது விஜய் நடித்த குஷி படத்தை எவராலும் மறக்க முடியாது. எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் விஜய், ஜோதிகா, விவேக் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான குஷி திரைப்படம் மிகுந்த வரவேற்பை பெற்றது.

Samantha and vijay devarakonda movie to be titled as kushi

இப்படத்தில் நிறைய சீன்கள் இன்னும் பல விதமாக ரீக்ரியேட் செய்யப்பட்டு வருகிறது. குஷி திரைப்படம் தமிழில் ஹிட் ஆன பின் தெலுங்கிலும் ரிமேக் செய்யப்பட்டது.

Samantha and vijay devarakonda movie to be titled as kushi

இந்நிலையில், விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்திற்கு குஷி என்ற பெயரை சூட்டி இருக்கிறார்கள் என தகவல் கசிந்து இருக்கிறது.

Samantha and vijay devarakonda movie to be titled as kushi

குஷி தலைப்பை தற்போது இந்த படத்திற்கு வைக்க படக்குழு முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. வரும் மே 9ம் தேதி பர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன் அறிவிப்பு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Samantha and vijay devarakonda movie to be titled as kushi

இப்படத்தின் ஷூட்டிங் காக காஷ்மீர் சென்ற போது தான் சமந்தா பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றதாக வீடியோ ஒன்று வெளியானது குறிப்பிடத்தக்கது.

Share this post