மனம் மாறிய நாகசைதன்யா.. மீண்டும் இணையும் சமந்தா - நாகசைதன்யா? விவாகரத்தில் திடீர் ட்விஸ்ட்

samantha and naga chaitanya to rejoin again cancelling divorce information getting viral

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. கவுதம் மேனனின் Ye Maaya Chesave என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, நீதானே எந்தன் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, தெறி, அஞ்சான், 24, மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.

samantha and naga chaitanya to rejoin again cancelling divorce information getting viral

தெலுங்கில், ஓ பேபி, ரங்கஸ்தலம், மகாநதி போன்ற பல வெற்றி திரைப்படங்களில் முன்னணி தெலுங்கு நடிகர்களுடனும் நடித்துள்ளார். ஒரு சில படங்களில் ஒன்றாக நடித்ததன் மூலம் ஏற்பட்ட காதலால் நாகார்ஜுனா மற்றும் அமலா அவர்களின் மூத்த மகனான நடிகர் நாகசைதன்யா அவர்களை திருமணம் செய்து கொண்டார்.

samantha and naga chaitanya to rejoin again cancelling divorce information getting viral

2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்கள், ஸ்வீட் ஜோடியாக வலம் வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் சுமூகமாக பிரிந்து விட்டனர். விவாகரத்திற்கு பின்னர், திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ள சமந்தாவின் ஊ சொல்றியா மாமா பாடல் செம ஹிட் அடித்தது. மேலும், திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

samantha and naga chaitanya to rejoin again cancelling divorce information getting viral

இந்நிலையில், சமந்தா - நாகசைதன்யா ஜோடி மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரின் விவாகரத்துக்கு என்ன காரணம் என்பது குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்த நிலையில், இருவருமே இது குறித்து வெளிப்படையாக கூறவில்லை. தொடர்ந்து இருவரும் தங்களது நடிப்பு பயணத்தில் ஈடுபாடு காட்டி வந்தனர்.

samantha and naga chaitanya to rejoin again cancelling divorce information getting viral

அந்த வகையில், சமந்தா நடிப்பில், நவம்பர் 11ம் தேதி, ‘யசோதா’ திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும் மையோசிட்டிஸ் பிரச்சனைக்கு சிகிச்சை எடுத்து கொண்டே அதற்கான டப்பிங் போன்ற பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். இதுகுறித்து சமந்தா வெளியிட்ட புகைப்படம் வைரலானது. சமந்தா, இப்படி ஒரு அரியவகை பிரச்சனையால் அவதி படுவதை அறிந்து நாகசைதன்யா சமந்தாவை சந்தித்ததாக கூறப்பட்டது.

samantha and naga chaitanya to rejoin again cancelling divorce information getting viral

மேலும் இருவரும், விவாகரத்து முடிவை கைவிட்டு விட்டு, சேர்ந்து வாழ முடிவு செய்ததாகவும் சில செய்திகள் வெளியாகி வருகிறது. ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் இதுவரை வெளிவரவில்லை. இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்றும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post