இரவு நேரம் சமந்தா இன்ஸ்டாவில் அந்த போஸ்ட்டால் ஷாக்கான ரசிகர்கள்.. உண்மையில் நடந்தது என்ன ?

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. கவுதம் மேனனின் Ye Maaya Chesave என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, நீதானே எந்தன் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, தெறி, அஞ்சான், 24, மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.
தெலுங்கில், ஓ பேபி, ரங்கஸ்தலம், மகாநதி போன்ற பல வெற்றி திரைப்படங்களில் முன்னணி தெலுங்கு நடிகர்களுடனும் நடித்துள்ளார். ஒரு சில படங்களில் ஒன்றாக நடித்ததன் மூலம் ஏற்பட்ட காதலால் நாகார்ஜுனா மற்றும் அமலா அவர்களின் மூத்த மகனான நடிகர் நாகசைதன்யா அவர்களை திருமணம் செய்து கொண்டார்.
2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்கள், ஸ்வீட் ஜோடியாக வலம் வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக சில நாட்களுக்கு முன் இருவரும் சுமூகமாக பிரிந்து விட்டனர்.
விவாகரத்திற்கு பின்னர், திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ள சமந்தாவின் ஊ சொல்றியா மாமா பாடல் செம ஹிட் அடித்தது. மேலும், திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.
சமந்தா - நாக சைதன்யா அவர்களின் விவாகரத்து குறித்த காரணம் இன்னும் வெளியாகவில்லை. தற்போது ஒரு நிகழ்ச்சியில் சமந்தா தனது விவாகரத்துக்கான காரணம் குறித்து பேசியுள்ளார் என தகவல் வெளியாகி இருந்தது.
அதாவது, பாலிவுட் சின்னதிரையில் மிகவும் பேமஸ் ஆன நிகழ்ச்சி என்றால் காபி வித் கரண் ஜோகர். இவ்வளவு இந்தியில் புகழ் பெற்ற ரியாலிட்டி ஷோவான காஃபி வித் கரண் நிகழ்ச்சியின் 7வது சீசன் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. இதில் சமந்தா அண்மையில் கலந்துகொண்டார். அதில் ‘நான் ஏன் சைதன்யாவை பிரிந்தேன்’ என தனது விவாகரத்துக்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது செம வைரலாக பேசப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் நடிகை சமந்தா, திருமண வாழ்க்கை சந்தோஷமில்லாமல் அமைவதற்கு நீங்கள் தான் காரணம் என அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளரும், பிரபல பாலிவுட் இயக்குனருமான கரண் ஜோகரை பார்த்து கூறுகிறார். ஏனென்றால் நீங்கள் தான் K3G படத்தில் திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் என காட்டினீர்கள்.
ஆனால் உண்மையில் அது கே.ஜி.எஃப் படம் போன்று பல பிரச்சனைகள் நிறைந்தது என கூறினார் சமந்தா. இந்நிகழ்ச்சி வருகிற ஜூலை 7ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. இதில் சமந்தா பேட்டியை ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தற்போது யசோதா, குஷி உள்ளிட்ட திரைப்படங்களில் சமந்தா நடித்து வருகிறார். விரைவில் இந்த படங்கள் வெளியாகவுள்ளன. இதையடுத்து பாலிவுட்டில் ஒரு படம் மற்றும் வெப் தொடர் ஒன்றை கைவசம் வைத்துள்ளார் சமந்தா. இவ்வாறு கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என பான் இந்தியா நடிகையாக கலக்கி வருகிறார் சமந்தா.
இவர் படங்களில் பிசியாக இருந்தாலும் சோசியல் மீடியாவிலும் படு ஆக்டிவாக இயங்கி வருகிறார். இதனால் இவரை இன்ஸ்டாகிராமில் 2 கோடிக்கும் அதிகமானோர் பாலோ செய்து வருகின்றனர். இதனிடையே நேற்று இரவு சம்பந்தமே இல்லாத ஒரு நபரின் புகைப்படம் சமந்தாவின் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடப்பட்டு இருந்தது.
இதைப் பார்த்த ரசிகர்கள், அவரது இன்ஸ்டா பக்கம் ஹேக் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்து வந்தனர். பின்னர் இதுகுறித்து விளக்கமளித்த சமந்தாவின் மேனேஜர், தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடிகை சமந்தாவின் இன்ஸ்டா பக்கத்தில் அந்த பதிவு தவறுதலாக பதிவாகி உள்ளது என்றும், பின்னர் அது சரிசெய்யப்பட்டு விட்டதாகவும் கூறி இருந்தார். தற்போது அவரது இன்ஸ்டா பக்கம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.