சர்ச்சையில் சிக்கிய சாய் பல்லவி.. 'காஷ்மீர் பண்டிட்களுக்கு நடந்தது.. இங்க இஸ்லாமியர்களுக்கு நடந்திருக்கு..' வைரலாகும் வீடியோ !

Sai pallavi speech getting viral on social media

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ப்ரேமம் திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தவர் சாய் பல்லவி. மலர் டீச்சராக ரசிகர்கள் மனதில் நாற்காலி போட்டு அமர்ந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வந்தார்.

Sai pallavi speech getting viral on social media

தெலுங்கில் பிடா, மிடில் கிளாஸ் அப்பாயி, ஷ்யாம் சிங்க ராய் போன்ற படங்களிலும், தமிழில் தியா, மாரி 2, NGK போன்ற திரைப்படங்களிலும், மலையாள மொழியில் ப்ரேமம், காளி, அதிரன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதற்கு முன்னரே, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.

Sai pallavi speech getting viral on social media

தென்னிந்திய திரையுலகத்தில் முன்னணி நடிகைகள் அந்தஸ்துக்கு உயர்ந்திருக்கும் சாய் பல்லவி, தற்போது இவர் கைவசம் விராட பருவம் திரைப்படம் மட்டுமே உள்ளது. புதிதாக பட வாய்ப்புகள் ஏற்காமல் இருந்து வருகிறார்.

Sai pallavi speech getting viral on social media

இதன் காரணமாக அவருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும், அதனால் தான் அவர் புதிய பட வாய்ப்புகளை தவிர்த்து வருவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது.

Sai pallavi speech getting viral on social media

இதற்கு விளக்கம் அளித்த சாய் பல்லவி ‘திருமணம் குறித்து பரவும் தகவல் உண்மையில்லை. நல்ல கதாபாத்திரத்திற்காகவும் கதைக்காகவும் காத்திருப்பதனால் அதிக படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை.

சாய் பல்லவி நடித்தால் நல்ல படமாகத் தான் இருக்கும் என ரசிகர்கள் நம்புகின்றனர். அதற்காகவே கதை தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறேன்” என கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

Sai pallavi speech getting viral on social media

தமிழில் தற்போது இவர் கார்கி மற்றும் மாவீரன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கில் விராட பருவம் என்கிற படத்தில் நக்சலைட்டாக நடித்துள்ளார் சாய் பல்லவி. ராணா, பிரியாமணி, நிவேதா பெத்துராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் வருகிற ஜூன் 17ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Sai pallavi speech getting viral on social media

அதன்படி புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை சாய் பல்லவி சொன்ன கருத்து சமூக வலைதளங்களில் பேச்சுப்பொருளாக மாறியுள்ளது. அவர், இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் காஷ்மீரில் காஷ்மீர் பண்டிட்கள் கொல்லப்படுவதும், இங்கு மாடுகளை கொண்டு சென்ற இஸ்லாமியர்களை வழிமறித்து ஜெய் ஸ்ரீராம் என சொல்லச்சொல்லி தாக்குதல் நடத்தி அவரை கொன்றதும் ஒன்றுதான். இரண்டுமே மிகவும் தவறான செயல்.

மதத்தின் பேரால் எந்தவொரு மனித உயிரும் போகக் கூடாது என்கிற கருத்தை முன்னிறுத்தி நடிகை சாய் பல்லவி பேசியிருப்பது டிரெண்டாகி வருகிறது. சிலர் அவருக்கு ஆதரவாகவும், சிலர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Share this post