'அந்த வீடியோல Pause பண்ணி இத எல்லாம் விமர்சித்தாங்க..' சாய் பல்லவி வெளியிட்ட உண்மை !

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ப்ரேமம் திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தவர் சாய் பல்லவி. மலர் டீச்சராக ரசிகர்கள் மனதில் நாற்காலி போட்டு அமர்ந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வந்தார்.
தெலுங்கில் பிடா, மிடில் கிளாஸ் அப்பாயி, ஷ்யாம் சிங்க ராய் போன்ற படங்களிலும், தமிழில் தியா, மாரி 2, NGK போன்ற திரைப்படங்களிலும், மலையாள மொழியில் ப்ரேமம், காளி, அதிரன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இதற்கு முன்னரே, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். தென்னிந்திய திரையுலகத்தில் முன்னணி நடிகைகள் அந்தஸ்துக்கு உயர்ந்திருக்கும் சாய் பல்லவி, சமீபத்தில் ‘விராடபர்வம்’ படத்தில் நடித்திருந்தார். தற்போது, கவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் காளி வெங்கட், சாய் பல்லவி நடித்துள்ள திரைப்படம் கார்கி.
நடிகை சாய் பல்லவி நிஜத்தில் ஒரு மருத்துவம் பயின்றவர் என்பது பலருக்கும் தெரியும். அதே போல சினிமாவில் அறிமுகமானதில் இருந்தே சாய் பல்லவி குடும்பபாங்கான ரோலில் நடித்து வருகிறார். அதே போல பல பொது நிகழ்ச்சிகளில் புடவை அணிந்தே செல்கிறார். இதற்கான காரணத்தை சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அதில் தனக்கு 18 வயது இருக்கும் போது கல்லூரியில் டான்ஸ் ஆடி இருந்தேன். அப்போது நான் அந்த டான்ஸுக்கு ஏற்றார் போல உடையில் ஆடி இருந்தேன். ஆனால், நான் பிரேமம் படத்தில் நடித்து முடித்த போது, அந்த வீடியோவில் என் ஆடை விலகியதை பாஸ் செய்து சுட்டி காட்டி இருந்தனர். அது எனக்கு ஒரு சங்கடத்தை ஏற்படுத்தியது. அன்றில் இருந்தே நான் புடவையை கட்ட ஆரம்பித்துவிட்டேன் என்று கூறியுள்ளார். ஆனால், என் பிள்ளைகளுக்கு எந்த உடையையும் அணியும் சுதந்திரத்தை கொடுப்பேன் என்றும் கூறியுள்ளார்.
Skin Is Just a another dress - #Saipallavi About Dressing Choice Of a Women 👍👍👍 pic.twitter.com/AQQ2EfXZ6z
— chettyrajubhai (@chettyrajubhai) July 10, 2022