சாணி காகிதம் - நேரடியாக OTT ரீலிஸ் ? ரிலீஸ் தேதி குறித்து வெளியான தகவல்

Saani kayidham to release in ott on april 7th

சினிமா உலகை பொறுத்தவரை கிரிக்கெட் வீரர்கள், பல துறை சார்ந்த பிரபலங்கள் அனைவரும் நடிகர்களாக அவதாரம் எடுத்து வருகின்றனர். அப்போ, இயக்குனர்கள் நடிகர்களாவதில் என்ன தப்பு என டாப் இயக்குனர்கள் நடிகர்களாக மாறி வருகின்ற்னர்.

சமுத்திரக்கனி, சசிகுமார், சுந்தர் சி, பாக்யராஜ், ரவிக்குமார், கவுதம் மேனன் என லிஸ்ட் நீளும் நிலையில், தற்போது, தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனராக வலம் வரும் செல்வராகவன் ஹீரோவாக மாற முடிவு செய்துள்ளார்.

Saani kayidham to release in ott on april 7th

செல்வராகவன் இயக்கத்தில் புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன்,என் ஜி கே உள்ளிட்ட வித்தியாசமான கதைகள் இன்றும் சிறந்த படைப்புகளாக திகழ்கின்றனர். பீஸ்ட் படத்தில் செல்வராகவன் நடிக்கும் நிலையில், தற்போது சாணி காகிதம் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

Saani kayidham to release in ott on april 7th

ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் சாணி காகிதம். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். 80களில் நடப்பது போன்ற கதைக்களத்துடன், ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.

Saani kayidham to release in ott on april 7th

கடந்த வருடம் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று தந்தது. இந்நிலையில், இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 7ம் தேதி நேரடியாக ஓடிடியில் ரீலிஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this post