ட்விட்டரை விட்டே போய்ட்டாரா? தளபதி67 ட்வீட்டால் அல்லல்படும் மனோபாலா..
விஜயின் வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து, அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள தளபதி67 திரைப்படம் குறித்து ஏகப்பட்ட தகவல்கள் மற்றும் எதிர்பார்ப்புகள் கிளம்பி வருகின்றன. இப்படம் LCU-வில் வருவதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
தளபதி67 படத்தில் விஜய் ஜோடியாக த்ரிஷா நடிக்கவுள்ளதாகவும், இன்னும் சில நடிகர் நடிகைகள் பெயரும் இணையத்தில் உலா வருகிறது. ஆனால் படத்தை குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமாக அறிக்கையும் வெளியாகவில்லை. இந்நிலையில், இயக்குனரும், நடிகருமான மனோபாலா சமீபத்தில் தளபதி 67 படத்தை பற்றி அப்டேட் ட்வீட் போட்டது செம வைரல் ஆனது.
தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர், காமெடியன் என பல அடையாளங்களுடன் தமிழ் திரையுலகில் வலம் வருபவர் நடிகர் மனோபாலா. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் மனோபாலா, சினிமா, அரசியல் என அனைத்தை பற்றியும் கருத்துகளை வெளிப்படையாக தெரிவிப்பவர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், “தளபதி 67 படம் முதல் நாள் ஷூட்டிங் மிக சிறப்பாக இருந்தது. நான் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜை சந்தித்தேன். முதல் நாளே நன்றாக இருந்தது” என்று இவர் பதிவிட்ட ட்வீட் வேகமாக இணையத்தில் பரவியது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் முன்பே அவர் இந்த பதிவை வெளியிட்டதால், அதற்கு பிறகு டெலீட் செய்து விட்டார் மனோபாலா.
மேலும் அவர்” நான் பதிவிட்ட ட்வீட்டை நீக்கிவிட்டேன்.. என்னை மன்னித்து விடுங்கள்” என்று கூறினார். இருப்பினும் விஜய் ரசிகர்கள் அவரை மோசமாக ட்ரோல் செய்தனர். இதனால் மீண்டும் மனோபாலா ட்வீட் செய்துள்ளார். அதில் “ எனக்கு யாரோ ஒருவர் போன் செய்து, என்னிடம் ட்விட்டரில் இருந்து சென்று விட்டீர்களா? என்று கேட்டார். இல்லை நான் ட்விட்டரில் இருக்கிறேன்” என்று தெரிவித்து இருக்கிறார்.