6 ஹீரோயின்களை ஏமாற்றினாரா பிரபுதேவா ? இணையத்தில் வெளியான தீயாய் பரவும் தகவல்
பிரபல நடன இயக்குனர் சுந்தரம் அவர்களின் மகன் நடன மாஸ்டர் மற்றும் நடிகரான பிரபு தேவா, தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார். மௌன ராகம் மற்றும் அக்னி நட்சத்திரம் படத்தில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த பிரபு தேவா, 100 திரைப்படங்களுக்கு மேல் நடன மாஸ்டராக பணியாற்றியுள்ளார்.
1994ம் ஆண்டு இந்து திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். பின்னர், காதலன், ராசய்யா, லவ் பர்ட்ஸ், மிஸ்டர் ரோமியோ, மின்சாரா கனவு, VIP, காதலா காதலா, நினைவிருக்கும் வரை, 123, ஏழையின் சிரிப்பில், உள்ளம் கொள்ளை போகுதே போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இதன் நடுவே, போக்கிரி, வில்லு போன்ற திரைப்படங்களில் இயக்குனராக பணியாற்றினார். இப்படி நடிகர், நடன கலைஞர், இயக்குனர் என பல அவதாரங்களில் திரையுலகில் வலம் வருகிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல அனைத்து மொழி திரையுலகிலும் முன்னணி நட்சத்திரமாக வலம் வருகிறார்.
சமீபத்தில், பிரபுதேவா நடிப்பில் ’மை டியர் பூதம்’ திரைப்படம் வெளியாகி நல்ல வெற்றி பெற்றுள்ள நிலையில், அவருடைய அடுத்த படமான ’பஹிரா’ ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, 6 ஹீரோயின்களை ஏமாற்றி இருப்பதாக தகவல் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபுதேவா நாயகனாக நடிக்கும் ‘பஹிரா’ படத்தில் அம்ரியா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி அய்யர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் என 7 நாயகிகள் நடிக்கின்றனர். இவர்களில் 6 பேரை காதலித்து ஏமாற்றும் சைக்கோ கேரக்டரில் பிரபுதேவா நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் இந்த படத்தின் கதை வித்தியாசமானதாக இருக்கும் என்று கூறப்படுவதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. த்ரிஷா இல்லைன்ன நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ’பஹிரா’. சைக்கோ கதையம்சம் கொண்ட இந்த படம் என்ன விமர்சனங்களை பெரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.