'அவர் அனுப்பின இந்த VoiceNote கேட்டு கண்ணீரே வந்துருச்சு..' பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த ரோபோ சங்கர் !

Robo shankar opens up about iravin nizhal audio launch issue on parthiban

கடந்த சில நாட்களுக்கு முன் இரவின் நிழல் என்னும் பார்த்திபன் அவர்களின் திரைப்பட இசை நிகழ்ச்சி விழாவில் பார்த்திபன் நடந்து கொண்டது பற்றி அதிகம் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வந்தது.

Robo shankar opens up about iravin nizhal audio launch issue on parthiban

இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் பார்த்திபன், வரலக்ஷ்மி சரத்குமார், ஆனந்த கிருஷ்ணன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இரவின் நிழல். இப்படம் ரெகார்ட் பிரேக் செய்யும் அளவிற்கு சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம். இப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

Robo shankar opens up about iravin nizhal audio launch issue on parthiban

இப்படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியின் போது ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுடன் மேடையில் உரையாடிக்கொண்டிருந்த இயக்குனர் பார்த்திபன், மைக் சரியாக வேலை செய்யவில்லை என மேடையில் இருந்து மைக்கை கீழே போட்டது சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

Robo shankar opens up about iravin nizhal audio launch issue on parthiban

பிறகு விழாவில் பேசிய பார்த்திபன், ‘பொதுவாகவே நான் மேடையில் பேசும்போது ரொம்ப பதட்டம் ஆகிவிடுவேன். ஏனென்றால், எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என நினைப்பேன். மைக் வேலை செய்யவில்லை. அந்த கோபத்தில் நான் மைக்கை தூக்கி போட்டு விட்டேன். நான் செய்தது அநாகரிகமான செயல் தான். அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என கூறியிருந்தார்.

Robo shankar opens up about iravin nizhal audio launch issue on parthiban

மேலும், பார்த்திபன், ரோபோ ஷங்கர் மீது மைக்கை தூக்கி எறிந்தார் என சமூக வலைத்தளங்களில் சர்ச்சையாக இந்த சம்பவம் மாறி போகவே, தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள பார்த்திபன், ரோபோ ஷங்கரிடம் கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டிருந்தார்.

Robo shankar opens up about iravin nizhal audio launch issue on parthiban

அதற்கு பிறகு ரோபோ ஷங்கருக்கு முத்தம் கொடுத்து போட்டோவுக்கு எடுத்து வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் இந்த சம்பவம் பற்றி ரோபோ ஷங்கர் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

Robo shankar opens up about iravin nizhal audio launch issue on parthiban

“நான் பேசவேண்டிய நேரத்தில் சரியாக ஆடியோ மைக் வேலை செய்யவில்லை. இந்த மைக்கிலாவது பேசுங்க என தூக்கி கொடுத்தது தான் அது. அதை நான் பிடிக்காமல் விட்டதால் தான் அப்படி ஆகிவிட்டது. யாரையும் hurt செய்யாத ஒரு இயக்குனர் அவர். எல்லோரிடமும் அன்பாக இருக்க கூடியவர். என் குடும்ப ரீதியாக அவர் மீது மிகப்பெரிய மரியாதை இருக்கிறது.

Robo shankar opens up about iravin nizhal audio launch issue on parthiban

அவர் எனக்கு ஒரு வாய்ஸ் நோட் அனுப்பி இருந்ததை கேட்கும்போது எனக்கு கண்ணீரே வந்துவிட்டது. அவ்வளவு சாரி கேட்டிருக்கிறார். 1008 டென்ஷனில் சில தவறுகள் நடக்கத்தான் செய்யும். அதற்காக அவர் மேடையிலேயே மன்னிப்பு கேட்டுவிட்டார்.

Robo shankar opens up about iravin nizhal audio launch issue on parthiban

இரவின் நிழல் நடித்தது எனக்கு ஒரு வாழ்நாள் அனுபவம். 25 படங்கள் நடித்தது போல அனுபவம். அப்படம் எத்தனை ஆஸ்கார், தேசிய விருது வாங்கும் என பாருங்க” என கூறி இருக்கிறார்.

Share this post