'எம்புட்டு அழகா இருக்கு?' - ரக்ஷிதா வெச்ச கண் வாங்காமல் பார்த்த ராபர்ட் மாஸ்டர்.. வைரல் வீடியோ !
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாக தொடங்கி இருக்கிறது.
பிக்பாஸ் சீசன் 6ல் யூடியூபர் ஜி.பி.முத்து, கானா பாடகர் அசல் கோலார், திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர், நடிகை ஆயிஷா, மாடல் ஷெரினா, நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் பாடகர் ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, மெட்டி ஒலி சாந்தி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே.மகேஸ்வரி, வி.ஜே. கதிரவன், மாடல் குயின்சி, மாடல் நீவா, பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடன இயக்குனர் ராபர்ட். நிகழ்ச்சியில் ராபர்ட் மாஸ்டர் நன்றாக விளையாடி வருகிறார். சில டாஸ்குகளில் இவர் வெற்றியும் பெற்று இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனின் அமைதியான போட்டியாளர் என்றால் ராபர்ட் மாஸ்டர் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் அதே நேரத்தில் பேச வேண்டிய நேரத்தில் சரியான பாயிண்ட் எடுத்து பேசுவதிலும் அவர் தவறுவதில்லை.
இந்நிலையில், ராபர்ட் மாஸ்டர் ரக்சிதாவை ஏக்கத்துடன் பார்க்கும் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஏற்கனவே, ஒரு டாஸ்கில் ராபர்ட் மாஸ்டர் – ரக்ஷிதா இருவரும் எதிர் எதிரே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த டாஸ்க்கை வைத்து நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வந்தனர்.
இந்நிலையில், தற்போது, ரக்சிதா, விக்ரமனிடம் ஏதோ பேசிக்கொண்டிருக்கும் போது அவரை ராபர்ட் மாஸ்டர் பார்க்கும் பார்வை குறித்த வீடியோவை நெட்டிசன்கள் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோவுக்கு பின்னணியாக சிவகார்த்திகேயன், திவ்யா நடித்த ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் இடம்பெற்ற வசனத்தையும் பின்னணியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ’யோவ் சிவனாண்டி நீ பெத்த பொண்ணாயா இது? எம்புட்டு அழகா இருக்கு? என்ற வசனத்தில் பின்னணியில் அமைந்துள்ள இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
My wife ~
— Raja (@whyrajawhy) October 27, 2022
Robert master Rachitha-va paakura mathiri ennaikkavadhu paathu irukkiya. #BiggBossTamil #BiggBossTamil6
Meanwhile master’s mindvoice ~ pic.twitter.com/zVPdWg7KVw