'ஜெயலலிதா ஹன்சிகா'வ தான் Select பண்ணாங்க' - பலருக்கும் தெரியாத விஷயத்தை சொல்லிய R.K.செல்வமணி !
தெலுங்கில் முன்னணி இயக்குனரான பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக நடித்து “தேசமுருடு” என்னும் தெலுங்கு திரைப்படம் மூலம் திரையலகிற்கு அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இதற்கு ”சிறந்த அறிமுக நாயகி” விருதையும் பெற்றார்.
ஷக்கலக்கா பூம் பூம் என்னும் தொடர் மூலம் அறிமுகமாகி, குழந்தை நட்சத்திரமாக திரையுலகிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் இவர் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது. தமிழில் மாப்பிள்ளை, வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம் 2, மான் கராத்தே, பிரியாணி, ரோமியோ ஜூலியட், அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்தார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். ஆரம்பகட்டத்தில் பப்லிமாஸ் போல கொழுமொழுக் பெண்ணாக இருந்த இவரை “சின்ன குஷ்பு” “குட்டி குஷ்பூ” என கோலிவுட் வட்டாரம் செல்லமாக அழைத்து வந்தது.
இந்நிலையில், தற்போது, செம பிட்டாக உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆக மாறியுள்ளார். ஆனால், அப்டி இருந்ததே நன்றாக இருந்ததாக ரசிகர்கள் தங்கள் விருப்பம் தெரிவித்து சமூக வலைத்தளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர். தனது மார்க்கெட் குறையாமல் பார்த்து கொள்ளும் ஹன்சிகா, அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
தற்போது, பார்ட்னர், 105 நிமிஷங்கள், ரவுடி பேபி, மேலும் சில படங்களிலும் நடித்து வருகிறார். விரைவில் மஹா திரைப்படம் வெளியாகவுள்ளது. இதன் பிரெஸ் மீட் நடைபெற்றது. இதில் பேசிய இயக்குனர் ஆர்.கே.செல்வமணி ஹன்சிகா பற்றி பலருக்கும் தெரியாத விஷயத்தை சொல்லி இருக்கிறார்.
ஒரு விழாவில் ஜெயலலிதா அவர்களின் பாடலுக்கு நடனமாட நடிகையை தேர்வு செய்ய சொல்லி புகைப்படங்கள் தந்ததற்கு, ஹன்சிகாவை Select பண்ணதாகவும், அதன் பின்னர் தான் ஹன்சிகா அதற்கு நடனம் ஆடியதாகவும் கூறினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.