ஐபிஎல் போட்டி இடையே ரிலீஸ் ஆகும் ஆர்.ஜே.பாலாஜியின் ‘வீட்ல விசேஷம்’ டிரைலர் ! வைரல் வீடியோ

Rj balaji veetla vishesham trailer to be released in ipl play off

RJ, காமெடியன், இயக்குனர், கிரிக்கெட் கமெண்டேட்டர், நடிகர், தொகுப்பாளர் போன்ற பல அவதாரத்தில் திரையுலகில் வலம் வருபவர் RJ பாலாஜி. 92.7 பிக் FM என்னும் ரேடியோ சேனலில் பணியாற்றியதன் மூலம் பிரபலம் அடைந்தவர்.

அதனைத் தொடர்ந்து, நைட் ஷோ வித் RJ பாலாஜி, டேக் இட் ஈஸி, க்ராஸ் டாக் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்கள் மனதில் நல்ல இடத்தை பிடித்தார்.

Rj balaji veetla vishesham trailer to be released in ipl play off

இதன் பின்னர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த பாலாஜி, தீயா வேலை செய்யணும் குமாரு, வடகறி, நானும் ரவுடி தான், புகழ், வாயை மூடி பேசவும், காற்று வெளியிடை, வேலைக்காரன் போன்ற பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

Rj balaji veetla vishesham trailer to be released in ipl play off

மேலும், ஜல்லிக்கட்டு போராட்டம், வெள்ளம் போன்ற பிரச்சனைகளின் போது மக்கள் சார்பில் ஆதாரவு குரல் கொடுத்து தோள் கொடுத்து நின்றவர்.

இவரது பேச்சு மக்களால் மிகுதியாக ரசிக்கப்பட்டு வருகிறது.

Rj balaji veetla vishesham trailer to be released in ipl play off

நயன்தாரா நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் படத்தில் இயக்குனராக அறிமுகமானார்.

இப்படம் வெற்றியடைந்ததை அடுத்து பாலிவுட்டில் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பதாய் ஹோ படத்தை தமிழில் ரீமேக் செய்துள்ளார் ஆர்.ஜே.பாலாஜி.

Rj balaji veetla vishesham trailer to be released in ipl play off

அதன்படி வீட்ல விசேஷம் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி உள்ளார் ஆர்.ஜே.பாலாஜி.

சத்யராஜ், அபர்ணா பாலமுரளி, ஊர்வசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Rj balaji veetla vishesham trailer to be released in ipl play off

இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் 17ம் தேதி ரிலீசாக உள்ளது.

இந்நிலையில், ‘வீட்ல விசேஷம்’ படத்தின் டிரைலர் ரிலீஸ் இன்று நடைபெறும் லக்னோ - பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ப்ளே ஆஃப் போட்டியின் இடையில் வெளியிடப்படும் என ஆர்.ஜே.பாலாஜி கூறி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Rj balaji veetla vishesham trailer to be released in ipl play off

இதற்கு முன் இவரது எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன் போன்ற படங்களின் டிரைலரும் இப்படி வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share this post