'போதும் நிறுத்துங்க ப்ளீஸ்' நெல்சனுக்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்ட ஆர்.ஜே.பாலாஜி !

Rj balaji tweets about supporting nelson dilipkumar against trolling memes

RJ, காமெடியன், இயக்குனர், கிரிக்கெட் கமெண்டேட்டர், நடிகர், தொகுப்பாளர் போன்ற பல அவதாரத்தில் திரையுலகில் வலம் வருபவர் RJ பாலாஜி. 92.7 பிக் FM என்னும் ரேடியோ சேனலில் பணியாற்றியதன் மூலம் பிரபலம் அடைந்தவர்.

அதனைத் தொடர்ந்து, நைட் ஷோ வித் RJ பாலாஜி, டேக் இட் ஈஸி, க்ராஸ் டாக் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்கள் மனதில் நல்ல இடத்தை பிடித்தார்.

Rj balaji tweets about supporting nelson dilipkumar against trolling memes

இதன் பின்னர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த பாலாஜி, தீயா வேலை செய்யணும் குமாரு, வடகறி, நானும் ரவுடி தான், புகழ், வாயை மூடி பேசவும், காற்று வெளியிடை, வேலைக்காரன் போன்ற பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

Rj balaji tweets about supporting nelson dilipkumar against trolling memes

மேலும், ஜல்லிக்கட்டு போராட்டம், வெள்ளம் போன்ற பிரச்சனைகளின் போது மக்கள் சார்பில் ஆதாரவு குரல் கொடுத்து தோள் கொடுத்து நின்றவர்.

இவரது பேச்சு மக்களால் மிகுதியாக ரசிக்கப்பட்டு வருகிறது.

Rj balaji tweets about supporting nelson dilipkumar against trolling memes

நயன்தாரா நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் படத்தில் இயக்குனராக அறிமுகமானார்.

இப்படம் வெற்றியடைந்ததை அடுத்து பாலிவுட்டில் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பதாய் ஹோ படத்தை தமிழில் ரீமேக் செய்துள்ளார் ஆர்.ஜே.பாலாஜி.

Rj balaji tweets about supporting nelson dilipkumar against trolling memes

வீட்ல விசேஷம் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி உள்ளார் ஆர்.ஜே.பாலாஜி.

கலாட்டாவான காமெடி திரைப்படமாக இப்படம் உருவாகி இருக்கிறது. திருமண வயதில் இருமகன் இருக்கும் போது, ஊர்வசி கர்ப்பமாக இருக்கிறார். தந்தையாக சத்யராஜ் நடித்துள்ளார்.

Rj balaji tweets about supporting nelson dilipkumar against trolling memes

இதனால், ஆர்.ஜே.பாலாஜியை பார்த்து ஊரே கலாய்ப்பது என காட்சிகள் அமைந்துள்ளது. இப்படத்தில் குக் வித் கோமாளி புகழ், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் 17ம் தேதி ரிலீசாக உள்ளது.

Rj balaji tweets about supporting nelson dilipkumar against trolling memes

இந்நிலையில், விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் அவர்களை உயர்த்தியும், நெல்சன் திலீப்குமார் அவர்களை பீஸ்ட் பட தோல்விக்காக கலாய்த்தும் மீம்ஸ் நிறைய சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது.

கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, நெல்சன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பீஸ்ட். இப்படம் பெரும் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றதோடு நிறைய காட்சிகள் ட்ரோல் செய்யப்பட்டு வந்தது. இதன் நடுவே, தற்போது விக்ரம் பட வெற்றியைத் தொடர்ந்து, நெல்சன் திலீப்குமாரை நிறைய கலாய்த்து பதிவிட்டு வருகின்றனர். இதற்கு லோகேஷ் வருத்தம் தெரிவித்திருந்தார்.

Rj balaji tweets about supporting nelson dilipkumar against trolling memes

தற்போது, ஆர்.ஜே. பாலாஜி, சோஷியல் மீடியாக்களில் இயக்குநர் நெல்சனை தாக்குவதை நிறுத்துங்கள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். “நெல்சன் மிகச் சிறந்த இயக்குநர். நான் அவருடன் பல நிகழ்ச்சிகளில் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். நான் அவருடைய படங்களின் மிகப் பெரிய ரசிகன். அவர் மிகப் பெரிய திறமைசாலி, அவருடைய பயணம் நிச்சயம் அனைவருக்குமான முன்மாதிரி. நான் நிச்சயமாக சொல்கிறேன்.. வரும் காலத்தில் அவருடைய படங்கள் நிச்சயம் நமக்கு அதிகப்படியான சந்தோஷத்தை தரப்போகிறது. ஆகையால் இதை நிறுத்துங்கள்” என பதிவிட்டு இருக்கிறார்.

Rj balaji tweets about supporting nelson dilipkumar against trolling memes

Share this post