தளபதி விஜயின் அந்த படத்தை கலாய்த்து பேசினாரா ஆர்.ஜே.பாலாஜி ? வைரலாகும் வீடியோ !

Rj balaji speaks about vijay kuruvi film in nenjuku needhi audio launch

2019ம் ஆண்டு இந்தியில் ரிலீசான பிளாக்பஸ்டர் படமான ஆர்டிகிள்15 படத்தின் தமிழ் ரீமேக் தான் நெஞ்சுக்கு நீதி. தமிழக முன்னாள் முதல்வரான மு.கருணாநிதி அவர்கள் எழுதிய நெஞ்சுக்கு நீதி என்னும் புத்தகத்தின் பெயரையே இப்படத்திற்கு வைத்துள்ளனர்.

டைரக்டர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் ஆரி அர்ஜுனன், தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ளார். திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

Rj balaji speaks about vijay kuruvi film in nenjuku needhi audio launch

2021ம் ஆண்டு டிசம்பர் மாதமே இப்படத்தின் ஷுட்டிங் நிறைவடை நிலையில், போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 2022ம் ஆண்டு மே 20ம் தேதி தியேட்டர்களில் இப்படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் இன்று மாலை 6.30 மணிக்கு யூட்யூப் தளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

சென்னையில் நெஞ்சுக்கு நீதி படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன், அன்புச் செழியன், போனி கபூர், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன், தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி, டைரக்டர் அருண்ராஜா காமராஜ், நடிகர் ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Rj balaji speaks about vijay kuruvi film in nenjuku needhi audio launch

அப்போது பேசிய ஆர்.ஜே.பாலாஜி பேசிய விஷயம் தற்போது செம வைரலாகி வருகிறது. அதாவது, உதயநிதி ஸ்டாலின் அவர்களை 10 வருடமாக தெரியும், அப்போது அவர் ஹீரோ இல்லை தயாரிப்பாளர்.

அப்போது, சினிமா பத்தி அதிகம் பேசி கொண்டிருந்த போது, சினிமா பத்தி இவ்ளோ சொல்றீங்க, ஆனா எப்படி இப்டி ஒரு படத்தை எடுத்தீங்க என கேட்டதற்கு தோளில் கை போட்டு எனக்கும் அதுதான் தெரில என கூறினாராம்.

அந்த படத்தின் பெயரை அவர் கூறவில்லை. இந்நிலையில், அது என்ன படமாக இருக்கும் என ரசிகர்கள் குழம்பி இருந்த நிலையில், சிலர் அது விஜய் நடித்த குருவி படம். அந்த சமயத்தில், ரெட் ஜெயண்ட் சார்பில் உதயநிதி தயாரித்தது என பலர் விளக்கம் கொடுத்து வருகின்றனர்.

Rj balaji speaks about vijay kuruvi film in nenjuku needhi audio launch

இதனால், விஜய் ரசிகர்கள் சற்று கோபமாகி உள்ளனர். மேலும், தளபதி விஜயை ஆர்.ஜே.பாலாஜி தாக்கினாரா? என்பது போன்ற கேள்வி எழுந்துள்ளது. குருவி படத்தை தான் அவர் கூறினாரா என்பது குறித்து அவர் எந்த ஒரு விஷயமும் சொல்லாத நிலையில், நெட்டிசன்கள் இதனை யூகித்துள்ளனர்.

Share this post