Viral Video: "ஹீரோயின அப்படி சொல்றது Humour'ஆ" - 'லவ் டுடே' பட காட்சியை வெளுத்து வாங்கிய கோமாளி பட நடிகை.

rj anandhi slams about love today movie dialogue about women

2019ம் ஆண்டு பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு, சம்யுக்தா ஹெக்டே மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் கோமாளி. பள்ளி கூடத்தில் படிக்கும் போது எதிர்பாராத விபத்தில் சிக்கி கோமா வரை சென்று தனது வாழ்க்கையில் 16 வருடம் கோமாவில் இருந்து வெளியேறும் மனிதனுக்கு இந்த உலகம் எப்படி இருக்கும் என்பதனை சுவாரசியமாக சொல்லியிருப்பார்.

rj anandhi slams about love today movie dialogue about women

பிரதீப் ரங்கநாதன் இயக்கிய முதல் திரைப்படமான கோமாளி பாக்ஸ் ஆபிஸில் ரூ. 76 கோடி வரை வசூல் செய்திருந்தது. தற்போது பிரதீப் இயக்கம் மற்றும் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் லவ் டுடே. ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்து யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பிரதீப்புக்கு ஜோடியாக இவானா நடித்துள்ளார்.

rj anandhi slams about love today movie dialogue about women

சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர். திரையரங்குகளில் வெளியாகியுள்ள இப்படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களை கொடுத்துள்ளனர். நல்ல பொழுதுபோக்கு படமாக மட்டுமல்லாது இந்த காலத்து காதலை பிரதிபலிப்பதாக கூறியுள்ளனர்.

rj anandhi slams about love today movie dialogue about women

காதல் ஜோடி ஒருவருக்கு ஒருவர் போனை மாற்றிக்கொண்ட பின் நடக்கும் மோதல்களை நகைச்சுவை கலந்து சொல்லியுள்ள படம் தான் லவ் டுடே. முதல் பாதி முழுக்க காமெடி, இரண்டாம் பாதி முழுக்க எமோஷன் என பக்கா கமர்சியல் பேக்கேஜ் ஆக இப்படத்தை இயக்கியுள்ளார் பிரதீப். இன்றைய கால இளைஞர்களின் வாழ்வோடு ஒத்துபோகக்கூடிய கதை என்பதால் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது.

rj anandhi slams about love today movie dialogue about women

இப்படம் தெலுங்கில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் பிரதீப் ரங்கநாதனுக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவாகிவிட்டது. இந்நிலையில், பிரபல ரேடியோ ஜாக்கி ஆர்.ஜே.ஆனந்தி தனது வீடியோ பதிவில் “லவ் டுடே” படத்தில் வரும் ஒரு காட்சியை விமர்சித்திருந்தார். அவர் கூறியதாவது `நீ எனக்கும் என்னுடைய சகோதரிகளுக்கும் தவறான செய்திகளை பரப்பவில்லை அதனால் உன்னை நம்புகிறேன்.`நீ காதலிக்கும் பெண்ணுடன் உடலுறவு செய்ய விரும்பிகிறாய் ஆனால் அந்த அந்தரங்க விஷயத்தை உன்னுடைய நம்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறாய்.

rj anandhi slams about love today movie dialogue about women

இதனை நாங்கள் எப்படி நகைச்சுவையாக எடுத்துக்கொள்வோம் என்று எப்படி எதிர்பார்த்தீர்கள். அப்படியே நாங்கள் அதனை நகைச்சுவையாக எடுத்துக்கொண்டாலும் உங்களுடைய ஆழ்மனதில் நீங்கள் செய்வது தவறு என்று தெரியவில்லையா?? மேலும் இதை போன்ற விஷியங்களை பெண்கள் இன்னும் எத்தனை காலம் நகைச்சுவையாக எடுத்துக்கொள்வார்கள் என கேட்டிருந்தார் ஆர்.ஜே.ஆனந்தி. மேலும் இவர் இந்த பதிவை “காமசூத்ரா” புத்தகத்தை மதிப்பாய்வு செய்யும் போது அந்த விடியோவில் கூறியிருந்தார். இவர் கோமாளி படத்தில் ஜெயம் ரவி தங்கையாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Share this post