பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் ரேஷ்மா? புது சீரியல் குறித்த அறிவிப்பு விரைவில்..
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும், சீரியல் தொடர்களும் ரசிகர்களின் பேவரைட்டாக மாறி வரவேற்பு கிடைப்பது வழக்கம். அந்த வகையில், பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2, பாக்கியலட்சுமி உள்ளிட்ட தொடர்கள் செம ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகிறது.
பாக்கியலட்சுமி தொடர், ஒரு குடும்ப தலைவியின் கதையை எடுத்துரைக்கும் இந்த தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. டாப் TRPயை பிடித்து வரும் ஒரு சில தொடர்களில் பாக்கியலட்சுமி சீரியலும் ஒன்று. சில மாதங்களுக்கு முன் பாரதி கண்ணம்மா முதலில் இருந்த நிலையில், இப்போது பாக்கியலட்சுமி தான் டாப். இந்த வார ரேட்டிங்கில் கூட டாப் 5ல் வந்துள்ளது.
இந்த கதை ஒரு குடும்ப தலைவியின் இன்னல்கள் தாம் சந்திக்கும் சில பிரச்சனைகள் குறித்து எதார்த்தமாக சொல்லப்படும் கதை. இதில் நடிக்கும் அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இத்தொடரில் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக கதை சென்று கொண்டிருக்கிறது.
பாக்கியா - கோபி விவாகரத்து, கோபி - ராதிகா திருமண வாழ்க்கை, அம்ரிதா - எழில் காதல், இனியா மற்றும் தாத்தா கோபியை படுத்தும் பாடு என சுவாரஸ்யமாக சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. கணவர் ஏமாற்றிவிட்டார், பிரிந்துவிட்டோம் சமூதாயம் என்ன சொல்லும் என இன்றும் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் பெண்களுக்கு இந்த தொடர் முக்கியமானதாக உள்ளது.
தற்போது பாக்கியா கோபியை விவாகரத்து செய்து தனது குடும்பத்தையும், தொழிலையும் கவனித்து வருகிறார். இந்நிலையில், இந்த தொடரில் பாக்கியலட்சுமி கதாபாத்திரத்திற்கு சமமான பெற்று வரும் கேரக்டர் ராதிகா. இந்த கதாபாத்திரத்தில் ஜெனிபர் நடித்து வந்த நிலையில் அவரது வெளியேற்றத்தால் ரேஷ்மா இந்த சீரியலில் என்ட்ரி கொடுத்தார்.
இந்நிலையில், தற்போது இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள புத்தம் புதிய சீரியல் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் வில்லியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் இந்த புதிய சீரியல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இவர் பாக்கியலட்சுமி தொடரில் தொடர்ந்து நடிப்பாரா? அல்லது விலகிக் கொள்வாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.