'ஹேமந்த்னால பிரபல தொகுப்பாளினி கருக்கலைப்பு செய்திருக்காங்க..' ரேகா நாயர் வெளியிட்ட ஷாக்கிங் தகவல் !

Rekha nair opens up about hemanth played in popular vj life

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் குறித்து அனைவரும் அறிவர். கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி சென்னை நசரத் பேட்டையில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் சித்ரா.

இதற்கான உண்மை காரணம் குறித்து தற்போது வரை எந்த ஒரு தகவலும் இல்லை.

Rekha nair opens up about hemanth played in popular vj life

சித்ரா ஹேமந்த் என்பவரை காதலித்து பதிவு திருமணம் செய்திருந்தார்.

விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஜோடியாக வந்து இருந்த இவர்கள் சந்தோசமான ஜோடியாகவே எல்லாரும் பார்த்தனர்.

Rekha nair opens up about hemanth played in popular vj life

ஆனால், பதிவு திருமணமாகி 3 மாதத்திற்குள்ளேயே கணவருடன் தங்கியிருந்த போது சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவர்கள் அதன் பின்னர் பிரம்மாண்டமாக திருமணம் செய்யவிருந்தது குறிப்பிடத்தக்கது.

Rekha nair opens up about hemanth played in popular vj life

இதையடுத்து சித்ராவின் பெற்றோர்கள் மற்றும் நெருங்கிய வட்டாரங்கள் அளித்த தகவல் மூலம் தற்கொலைக்கு தூண்டியதாக ஹேமந்த் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் இருந்து 3 மாதங்களுக்கு முன்பு வெளியே வந்த ஹேமந்த் சமீபத்தில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி போலீஸில் புகார் அளித்தார்.

Rekha nair opens up about hemanth played in popular vj life

சிறையில் இருந்து வெளியேறிய ஹேமந்த், ஒரு பிரபல சேனலுக்கு பேட்டி அளித்த போது, சித்ரா மரணத்திற்கு ஒரு சில அரசியல் தலைவர்களும் ஒரு மாஃபியா கும்பலும் காரணம் என்றார்.

இதனை ஹேமந்தின் குற்றச்சாட்டுக்கள் வழக்கை திசை திருப்பும் முயற்சி என கூறப்படுகிறது. இந்நிலையில், சித்ராவின் நெருங்கிய தோழி மற்றும் சீரியல் நடிகையான ரேகா நாயர், ஹேமந்த் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார்.

Rekha nair opens up about hemanth played in popular vj life

ஹேமந்த் சித்ராவுக்கு முன்பே பல பெண்களை ஏமாற்றி, பல பெண்களை கர்ப்பமாக்கி திருமணம் செய்து கொள்ள முடியாது என கைவிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

அவனால் ஏமாற்றப்பட்ட பெண்கள் அபார்ஷன் செய்து தன்னிடம் ஹேமந்த் ஏமாற்றிவிட்டான் என அழுது புலம்பி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சிறையில் இருந்து வெளியே வந்த ஹேமந்த், 3 மாதங்களில் 11 பெண்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறிய ரேகா நாயர், ஹேமந்த் அந்த பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களையும் ஆதாரங்களாக காட்டியுள்ளார்.

Rekha nair opens up about hemanth played in popular vj life

மேலும் ஹேமந்த், திருமணம் ஆன பெண்கள், இளம்பெண்கள் என பலரிடம் டிரெஸ் இல்லாமல் போட்டோ கேட்டும், போனில் அந்தரங்க அங்கங்களை காட்டுமாறும் கேட்டுள்ளார் என்றும், அதற்கான ஆதாரங்கள் அனைத்தும் தன்னிடம் இருப்பதாக கூறியுள்ள ரேகா நாயர் அதையெல்லாம் தேவைப்பட்டால் கோர்ட்டில் காட்ட தயார் என்றும் கூறியுள்ளார்.

இன்னமும் பல பெண்கள் ஹேமந்தை நம்பி ஏமாந்து வருகின்றனர் என்றும் ரேகா நாயர் தெரிவித்துள்ளார்.

Rekha nair opens up about hemanth played in popular vj life

ஹேமந்த் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து தண்டனை கொடுக்காதவரை அவரால் பல பெண்களின் வாழ்க்கை சீரழியும் என்றும் எச்சரித்துள்ள ரேகா நாயர், சித்ரா மரணத்திற்கு ஹேமந்த்தான் காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.

ரேகா நாயரின் இந்த குற்றச்சாட்டுக்கள் பரபரப்பை கிளப்பியுள்ளது. பல பேட்டிகளில் வெளிப்படையாக அவர் பேசியிருந்தார்.

Rekha nair opens up about hemanth played in popular vj life

இந்நிலையில், ஹேமந்த் வலையில் பிரபல தொகுப்பாளினி ஒருவரும் விழுந்தார் என அவர் கூறியிருப்பது புது தகவலாக இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.

பிரபல முன்னணி தொகுப்பாளினி ஒருவர் ஹேமந்த் காதல் வலையில் சிக்கி அவரால் ஏமாற்றப்பட்டு கர்ப்பம் ஆகியுள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்ள அந்த தொகுப்பாளினி, ஹேமந்த்திடம் கேட்கவே, இது எல்லாம் காரணம் என திருமணம் செய்து கொள்ள முடியாது என ஹேமந்த் தெரிவித்து விட்டதாக கூறியுள்ளார்.

Rekha nair opens up about hemanth played in popular vj life

இதனால், அந்த தொகுப்பாளினி கருவை கலைத்து விட்டதாகவும் தனது வாழ்க்கையே ஹேமந்த் நம்பி வீணாகிவிட்டதாக புலம்பி வருவதாகவும் கூறியுள்ளார்.

Share this post