இந்த பிரபல நடிகருடன் காதலில் ரெஜினா? வைரலாகும் நெருக்கமான புகைப்படம்
தனது கடின உழைப்பு, நடிப்பு மற்றும் கவர்ச்சியின் மூலம் நல்ல வரவேற்பை பெற்று ரசிகர்கள் மத்தியில் ஒரு இடத்தை பிடித்துள்ளவர் நடிகை ரெஜினா கசாண்ட்ரா. சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்ததன் மூலம் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், இதற்கு முன்பாக கண்ட நாள் முதல், அழகிய அசுரா, பஞ்சாமிர்தம் போன்ற படங்களில் சிறு சிறு துணை வேடங்களில் நடித்துள்ளார்.
தமிழில் ராஜதந்திரம், மாநகரம் போன்ற நல்ல கதைகளம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். சந்திரமௌலி, ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் போன்ற படங்களில் நடித்து வந்த ரெஜினாவிற்கு தமிழில் மார்க்கெட் சற்று குறையவே, தெலுங்கில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்க தெலுங்கு திரையுலகில் அடைக்கலம் தேட தொடங்கினார்.
நீண்ட இடைவெளிக்கு பின்னர், செல்வராகவன் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா, நந்திதா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, பாலிவுட் திரைப்படங்கள் என கைவசம் திரைப்படங்களை வைத்துள்ள ரெஜினா, வெப் சீரிஸ்களிலும் ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது வாய்ப்புகள் தேட தனது கவர்ச்சி புகைப்படங்களை பயன்படுத்தி வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் பற்றிய கேள்விக்கு, 2020ம் ஆண்டு என்னுடைய காதல் முறிந்தது. அதிலிருந்து வெளிவர கொஞ்ச நாட்கள் ஆனது. இப்போது நான் யாரையும் காதலிக்கவில்லை. திருமணம் பற்றிய பேச்சை எடுக்கவே மாட்டேன். வாழ்க்கையில் திருமணம் செய்து கொள்வேனா, இல்லையா என்பது எனக்கே தெரியவில்லை. ஏனென்றால், சிறு வயது முதல் எனது சொந்த காலில் சுயமாக எப்படி வாழ்வது என்பதை பற்றி தான் என் அம்மா எனக்கு கற்றுக்கொடுத்துள்ளார்.
எனவே வாழ்க்கையில் யாரவது துணையாக வேண்டுமா? வேண்டாமா என்பது குறித்து யோசிக்கணும் என்று கூறி ஷாக் கொடுத்தார். இந்நிலையில், நேற்று அவரது பிறந்தநாளன்று தெலுங்கு நடிகர் சுந்தீப் மைக்கேல் ஹாப்பி பெர்த்டே பாப்பா, லவ் யூ அண்ட் வாழ்த்துக்கள் என்று கூறி அவருடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் சுந்தீப்பை காதலிக்கிறீங்களா என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.
Happpyyyy Birthdayyyy Papa…
— Sundeep MICHAEL Kishan (@sundeepkishan) December 13, 2022
Love you and Wishing you only the best of everything,always ♥️
Stay Happy..Stay Blessed ♥️@ReginaCassandra pic.twitter.com/pZGd9d5ibn