“என் Lifeல இதுக்கு முன்னாடி இப்டி ஒன்ன நா பாத்ததே இல்ல.." வைரலாகும் போட்டோ.. மகாலட்சுமியால் புலம்பும் ரவீந்தர்.!
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் டாபிக்காக வலம் வருவது தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி திருமண விஷயம் தான். ரவீந்தர் சந்திரசேகரன், தமிழ் திரையுலகில் சுட்ட கதை, முருங்கைக்காய் சிப்ஸ், கொலை நோக்கு பார்வை, கல்யாணம் போன்ற பல திரைப்படங்களை தயாரித்ததன் மூலம் தயாரிப்பாளராக வலம் வருபவர்.
இவர் கடந்த சில தினங்களுக்கு முன் பிரபல சின்னத்திரை நடிகை மஹாலக்ஷ்மி அவர்களை திருமணம் செய்து கொண்டார். படிக்கும் காலத்திலேயே கலை துறையில் அடியெடுத்து வைத்த இவர், நிறைய சீரியல்களில் நடித்துள்ளார்.
முக்கியமாக பல தொடர்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அன்பே வா, யாமிருக்க பயமேன், அரசி, செல்லமே, வாணி ராணி, பிள்ளை நிலா, விலாஸ் போன்ற பல பிரபல தொடர்களில் நடித்துள்ளார்.
தற்போது, ரவீந்தர் மற்றும் மஹாலக்ஷ்மி திருமணம் செய்துகொண்டுள்ளார். இருவருக்குமே இது 2வது திருமணம். இந்நிலையில், இவர்கள் திருமணம் ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது.
மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் இருவரும் புகைப்படங்கள் ஏதாவது பதிவிட்ட வண்ணம் உள்ளனர். இவர்கள் பதிவிடும் புகைப்படங்கள் தான், இன்ஸ்டாவில் பெருமளவு ட்ரெண்ட் ஆகி வருகிறது. அந்தளவிற்கு இருவரும் வைரல் ஜோடிகளாக ஆகி விட்டனர்.
ரவீந்தர், மகாலட்சுமி தம்பதியினர் தாங்கள் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களையும், தங்களின் காதல் குறித்த பதிவுகளையும் அவ்வப்போது சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் ரவீந்தர் தனது மனைவி மகாலட்சுமி சமையல் குறித்து புகைப்படத்துடன் புதிய பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், வேகவைத்த முட்டை கருகியிருப்பதை குறிப்பிட்டு பதிவிட்டுள்ள தயாரிப்பாளர் ரவீந்தர், “என் வாழ்க்கையிலேயே முட்டை இந்த நிலைக்கு கருகி போனதை நான் பார்த்ததில்லை. மகலாட்சுமி நிச்சயமாக என் எடை குறைய வைத்துவிடுவார். புது வாழ்க்கை. புதுமனைவி.. சூப்பர் சமையல்” என ஜாலியாக பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.