மகாலஷ்மிக்கு 'புது பெயர்' வைத்த ரவீந்தர்.. இணையத்தில் வைரலாகும் பதிவு !
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் டாபிக்காக வலம் வருவது தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி திருமண விஷயம் தான். ரவீந்தர் சந்திரசேகரன், தமிழ் திரையுலகில் சுட்ட கதை, முருங்கைக்காய் சிப்ஸ், கொலை நோக்கு பார்வை, கல்யாணம் போன்ற பல திரைப்படங்களை தயாரித்ததன் மூலம் தயாரிப்பாளராக வலம் வருபவர்.
இவர் கடந்த சில தினங்களுக்கு முன் பிரபல சின்னத்திரை நடிகை மஹாலக்ஷ்மி அவர்களை திருமணம் செய்து கொண்டார். படிக்கும் காலத்திலேயே கலை துறையில் அடியெடுத்து வைத்த இவர், நிறைய சீரியல்களில் நடித்துள்ளார்.
முக்கியமாக பல தொடர்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அன்பே வா, யாமிருக்க பயமேன், அரசி, செல்லமே, வாணி ராணி, பிள்ளை நிலா, விலாஸ் போன்ற பல பிரபல தொடர்களில் நடித்துள்ளார்.
தற்போது, ரவீந்தர் மற்றும் மஹாலக்ஷ்மி திருமணம் செய்துகொண்டுள்ளார். இருவருக்குமே இது 2வது திருமணம். இந்நிலையில், இவர்கள் திருமணம் ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது.
மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் இருவரும் புகைப்படங்கள் ஏதாவது பதிவிட்ட வண்ணம் உள்ளனர். இவர்கள் பதிவிடும் புகைப்படங்கள் தான், இன்ஸ்டாவில் பெருமளவு ட்ரெண்ட் ஆகி வருகிறது. அந்தளவிற்கு இருவரும் வைரல் ஜோடிகளாக ஆகி விட்டனர்.
இவர்கள் திருமணம் ஆகி ஒரு மாதம் ஆன நிலையில் தற்போது ஒரு புதிய பதிவை போட்டு அனைவரையும் கவனம் இழுத்து உள்ளார் ரவீந்தர். “People smile us for 100 reason.. My happniess have one reason its U LOVE YOU “MAYULU” “ என சொல்லி ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவர் செல்லமாக ம்,மஹாலக்ஷ்மியை மயிலு என கூறி பதிவிட்டுள்ளது செம வைரலாகி பேசப்பட்டு வருகிறது.