'விஜய் மகன் ஜேசன் சஞ்சய்க்கு ஜோடியா மௌன ராகம் 2 ரவீணா'வா?' வைரலாகும் பேட்டி !

Raveena daha interested in acting as pair with vijay son jason sanjay

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளி வரும் திரைப்படங்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இவரது மகன் ஜேசன் சஞ்சய் குறித்து அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பேசப்படுவது வழக்கம். விஜய் அவர்களின் மகன் ஜேசன் சஞ்சய் கனடாவில் சினிமா சம்பந்தப்பட்ட படிப்பை அண்மையில் படித்து முடித்தார்.

Raveena daha interested in acting as pair with vijay son jason sanjay

இவர் குழந்தை நட்சத்திரமாக, போக்கிரி படத்தில் ஒரு பாடலில், வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலில் என தோன்றியிருப்பார். தற்போது படிப்பை முடித்து திரும்பியுள்ள அவர், இதையடுத்து சினிமாவில் கவனம் செலுத்த உள்ளதாக பரவலாக பேசப்பட்டது.

Raveena daha interested in acting as pair with vijay son jason sanjay

முதலில் அவர் இயக்குனராக ஆசைப்படுவதாகவும், படம் இயக்கும் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்பட்டது. பின்னர் அவரை மிகப்பெரிய நடிகனாக்க விஜய் ஆசைப்படுவதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த செய்திகளுக்கு சமீபத்திய ஒரு நேர்காணலில் முற்றுப்புள்ளி வைத்த விஜய், சஞ்சய் தற்போதைக்கு சினிமா பக்கம் வர வாய்ப்பில்லை என கூறினார்.

Raveena daha interested in acting as pair with vijay son jason sanjay

மேலும் சஞ்சய்க்காக பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் சூப்பர் கதை ஒன்றை சொன்னதாகவும், ஆனால் சஞ்சய் தற்போது நடிக்க ஆர்வம் இல்லை என கூறி நடிக்க மறுத்துவிட்டதாகவும் விஜய் அந்த பேட்டியில் கூறினார்.

Raveena daha interested in acting as pair with vijay son jason sanjay

இந்நிலையில், ராட்சசன் படத்தில் நடித்ததன் மூலம் இளம் நடிகையாக தற்போது வலம் வரும், ரவீனா ஜேசன் சஞ்சய் பற்றி பேசியது வைரலாக பேசப்பட்டு வருகிறது.

Raveena daha interested in acting as pair with vijay son jason sanjay

மெளன ராகம் 2 சீரியலில் தற்போது நடித்து வரும் ரவீனா, சமீபத்திய பேட்டியில், விஜய் மகன் சஞ்சய் சினிமாவில் ஹீரோவாக நடித்தால் அதில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஆசைப்படுவதாக கூறி உள்ளார்.

Share this post