ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடிக்கும் விஜய் பட தமிழ் சினிமா நடிகை.. பாலிவுட் போய்ட்டாங்களா ?

மூத்த நடிகர் மற்றும் இயக்குனர் ஆன ராஜ் கபூரின் பேரன் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் ரிஷி கபூர் மற்றும் நீது சிங் ஆகியோரின் மூத்த மகன் ரன்பீர் கபூர். இவர் பாலிவுட் திரையுலகில் நம்பர் 1 நடிகராக வலம் வருபவர்.
பிளாக் திரைப்படத்தில் சஞ்சய் லீலா பன்சாலிக்கு உதவி இயக்குனராக பணியாற்றிய ரன்பீர், பன்சாலியின் காதல் திரைப்படமான சாவரியா திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். வேக் அப் சித், அஜப் பிரேம் கி கசாப் கஹானி மற்றும் ராக்கெட் சிங்: ராஜநீதி, ராக்ஸ்டார் போன்ற வெற்றி படங்கள் மூலம் பிரபலமானார்.
இதன் மூலம் ரன்பீர் கபூரை ராக்ஸ்டாரில் இருந்து சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்த்தியது. பர்ஃபி படத்தில் காது கேளாத மற்றும் ஊமை மனிதராக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். பின் யே ஜவானி ஹை தீவானி, ஏ தில் ஹை முஷ்கில், சஞ்சு போன்ற படங்களில் நடித்தார்.
ரன்பீர் அடுத்து வாணி கபூர் மற்றும் சஞ்சய் தத்துடன் ஷம்ஷேரா, லவ் ரஞ்சனுடன் ஷ்ரத்தா கபூர் ஜோடியாக பெயரிடப்படாத ஒரு படம், அனிமல் மற்றும் பிரம்மாஸ்திரா படங்கள் வெவ்வேறு நிலையில் தயாராகி வருகின்றன.
இதில் அனிமல் படத்தின் படப்பிடிப்பு இன்று (22.04.2022) ஆரம்பமாகி உள்ளது. இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா தெலுங்கு அர்ஜுன் ரெட்டியின் மூலம் பிளாக்பஸ்டர் தந்து பரபரப்பை ஏற்படுத்தியதோடு, தற்போது பாலிவுட் நட்சத்திரம் ரன்பீர் கபூருடன் முதல் முறையாக இணைந்துள்ளார்.
ஆக்ஷன் என்டர்டெய்னராக உருவாகும் அனிமல் திரைப்படம் இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இமயமலையில் தொடங்கியது. அனிமல் படம் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலும் வெளியிடப்படும்.
இந்த படத்தில் ரன்பீருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர் புஷ்பா, கீதா கோவிந்தம், சுல்தான் படங்களில் நடித்தவர். தமிழில் தற்போது விஜய்யின் 66வது படத்தில் நடித்து வருகிறார்.