'சிறுவயதில் குடும்பத்தில் அவ்ளோ கஷ்டம்.. காசில்லாம 2 மாசத்துக்கு ஒரு வீடு மாறுவோம்'.. கலங்கி பேசிய ராஷ்மிகா

rashmika mandanna speaks up about financial crisis her family faced during childhood days

தனது முதல் படமான கன்னட மொழியில் வெளியான கிரீக் பார்ட்டி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ரஷ்மிகா மந்தனா. இப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் செம ஹிட் அடித்த நிலையில், ராஷ்மிகாவிற்கு முதல் படமே வெற்றி படமாக அமைந்து விட்டது.

rashmika mandanna speaks up about financial crisis her family faced during childhood days

அதனைத் தொடர்ந்து, கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் கமிட் ஆகி அடுத்தடுத்து நடிக்கத் தொடங்கினார். தெலுங்கு மொழியில் இவர் கதாநாயகியாக நடித்து வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் இவரை பேன் இந்திய லெவல் பேமஸ் செய்தது. அதில் வரும் பாடல்கள் இவரது நடிப்பு என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தது.

rashmika mandanna speaks up about financial crisis her family faced during childhood days

இதனால், வெகு சில படங்களிலேயே முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக மாறிவிட்டார் ராஷ்மிகா. தமிழில், சுல்தான் திரைப்படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமானார். புஷ்பா படத்தில் இவரது வித்தியாசமான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.

rashmika mandanna speaks up about financial crisis her family faced during childhood days

இந்தியில் அமிதாப் பச்சனுடன் குட் பாய், சித்தார்த் மல்கோத்ராவுடன் மிஷன் மஜ்னு, அனிமல், தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் புஷ்பா 2, தமிழில் விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்திலும் நடித்து வருகிறார்.

rashmika mandanna speaks up about financial crisis her family faced during childhood days

இவ்வாறு கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என படு பிசியாக இருக்கும் ராஷ்மிகா, அவ்வப்போது வித்தியாசமான உடைகளில் போட்டோஷூட் மற்றும் வீடியோ எடுத்து பதிவிட்டு சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறார். இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா, காதல் வதந்திகளிலும் சிக்கி வருகிறார்.

rashmika mandanna speaks up about financial crisis her family faced during childhood days

நடிகர் விஜய் தேவரகொண்டாவை இவர் காதலிப்பதாக கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து வதந்திகள் பரவிய வண்ணம் உள்ளது. சமீபத்தில் தன்னைப்பற்றிய நெகடிவ் விமர்சனங்கள் குறித்தும், காதல் சர்ச்சைகள் குறித்து மனம் திறந்துபேசியிருந்த ராஷ்மிகா, தற்போது சிறுவயதில் தான் சந்தித்த கஷ்டங்கள் குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

rashmika mandanna speaks up about financial crisis her family faced during childhood days

அதில் அவர் கூறியதாவது, “சிறுவயதில் எனது பெற்றோரிடம் பணம் இருக்காது, குடும்பத்தில் அவ்ளோ கஷ்டம் இருக்கும். இரு மாதங்களுக்கு ஒரு வீடு மாறும் அளவுக்கு மிகவும் கஷ்டப்பட்டோம். அந்த கஷ்டத்திலும் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து என் பெற்றோர் என்னை வளர்த்தனர். ஒரு பொம்மை வாங்க கூட எங்களிடம் காசு இருக்காது. அதற்காக நான் மிகவும் ஏங்கி இருக்கிறேன்” என எமோஷனலாக பேசி உள்ளார் ராஷ்மிகா.

Share this post