போட்டோக்ராபர்களுக்கிடையே தள்ளுமுள்ளு.. பதறிப்போன ராஷ்மிகா.. வைரலாகும் வீடியோ !

rashmika mandanna shocked at mumbai airport because of videographers video viral

தனது முதல் படமான கன்னட மொழியில் வெளியான கிரீக் பார்ட்டி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ரஷ்மிகா மந்தனா. இப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் செம ஹிட் அடித்த நிலையில், ராஷ்மிகாவிற்கு முதல் படமே வெற்றி படமாக அமைந்து விட்டது.

rashmika mandanna shocked at mumbai airport because of videographers video viral

அதனைத் தொடர்ந்து, கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் கமிட் ஆகி அடுத்தடுத்து நடிக்கத் தொடங்கினார். தெலுங்கு மொழியில் இவர் கதாநாயகியாக நடித்து வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் இவரை பேன் இந்திய லெவல் பேமஸ் செய்தது. அதில் வரும் பாடல்கள் இவரது நடிப்பு என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தது.

rashmika mandanna shocked at mumbai airport because of videographers video viral

இதனால், வெகு சில படங்களிலேயே முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக மாறிவிட்டார் ராஷ்மிகா. தமிழில், சுல்தான் திரைப்படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமானார். புஷ்பா படத்தில் இவரது வித்தியாசமான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.

rashmika mandanna shocked at mumbai airport because of videographers video viral

இந்தியில் அமிதாப் பச்சனுடன் குட் பாய், சித்தார்த் மல்கோத்ராவுடன் மிஷன் மஜ்னு, அனிமல், தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் புஷ்பா 2, தமிழில் விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்திலும் நடித்து வருகிறார்.

rashmika mandanna shocked at mumbai airport because of videographers video viral

இவ்வாறு கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என படு பிசியாக இருக்கும் ராஷ்மிகா, மும்பை ஏர்போர்ட்டில் ஷாக்கான வீடியோ செம வைரலாகி வருகிறது. பிரபலங்கள் ஏர்போர்டிற்கு வருகிறார் என்றாலே அவர்களை போட்டோ மற்றும் வீடியோ எடுக்க போட்டோகிராபர்கள் ஏர்போர்ட்டில் குவிந்து விடுவது வழக்கம்.

அந்த வகையில், தற்போது ராஷ்மிகா ஏர்போட்டில் இருந்து வெளியே வரும் போது, போட்டோ & வீடியோ எடுக்க தள்ளுமுள்ளு ஏற்பட்டு போட்டோகிராபர் ஒருவர் மீது ஒருவர் மோதி தடுமாறி விழுந்ததை பார்த்த ராஷ்மிகா ஷாக்கான வீடியோ செம வைரலாகி வருகிறது.

Share this post