தளபதி66 அப்டேட் : விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Rashmika mandanna onboard thalapathy66 cast and crew

மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் வருகிற ஏப்ரல் 13ம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் பீஸ்ட். சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

Rashmika mandanna onboard thalapathy66 cast and crew

இப்படத்தில் பூஜா ஹெக்டே, யோகி பாபு, செல்வராகவன் மற்றும் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, ஏற்கனவே தளபதி66 திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. அதில், தோழா திரைப்படத்தை இயக்கிய பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் வம்சி தளபதி66 திரைப்படத்தை இயக்குவதாக தெரிந்தது.

இத்திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ் நடிக்கிறார் என்பதும் தகவல் வெளியானது. இப்படத்தின் ஹீரோயின் குறித்து பல தகவல்கள் அடுத்தடுத்து வதந்திகளாக வெளியாகி வந்த நிலையில், தற்போது ரஷ்மிகா மந்தனா நடிப்பதாக படக்குழுவினர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

தெலுங்கில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வரும் இவர், தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் திரைப்படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

Rashmika mandanna onboard thalapathy66 cast and crew

Share this post