'என் நாய்க்கும் ஃபிளைட் டிக்கெட் போட்டா தான் ஷூட்டிங்..' வைரலாகும் தகவல்.. உண்மையை ஓப்பனாக சொன்ன ராஷ்மிகா

தனது முதல் படமான கன்னட மொழியில் வெளியான கிரீக் பார்ட்டி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ரஷ்மிகா மந்தனா. இப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் செம ஹிட் அடித்த நிலையில், ராஷ்மிகாவிற்கு முதல் படமே வெற்றி படமாக அமைந்து விட்டது.
அதனைத் தொடர்ந்து, கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் கமிட் ஆகி அடுத்தடுத்து நடிக்கத் தொடங்கினார். தெலுங்கு மொழியில் இவர் கதாநாயகியாக நடித்து வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் இவரை பேன் இந்திய லெவல் பேமஸ் செய்தது. அதில் வரும் பாடல்கள் இவரது நடிப்பு என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தது.
இதனால், வெகு சில படங்களிலேயே முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக மாறிவிட்டார் ராஷ்மிகா. தமிழில், சுல்தான் திரைப்படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமானார். புஷ்பா படத்தில் இவரது வித்தியாசமான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.
இந்தியில் அமிதாப் பச்சனுடன் குட் பாய், சித்தார்த் மல்கோத்ராவுடன் மிஷன் மஜ்னு, அனிமல், தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் புஷ்பா 2, தமிழில் விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்திலும் நடித்து வருகிறார்.
இவ்வாறு கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என படு பிசியாக இருக்கும் ராஷ்மிகா, படப்பிடிப்புக்காக அடிக்கடி விமானத்தில் பயணித்து வருகிறார். அந்த சமயத்தில் தனது செல்ல நாய்க்குட்டியையும் அவர் கூடவே அழைத்து செல்வதாகவும், தன்னோடு சேர்த்து தனது நாய்க்கும் விமானத்தில் டிக்கெட் போட்டால் தான் ஷூட்டிங் வருவேன் என அவர் தயாரிப்பாளர்களிடம் கறாராக சொல்லிவிட்டதாகவும் செய்தி வெளியாகி வந்தது.
இதைப் பார்த்த நடிகை ராஷ்மிகா, “நீங்களே என் நாய்க்குட்டியை என்னுடன் பயணிக்க சொன்னாலும் அது வராது. அது ஐதராபாத்தில் உள்ள என் வீட்டில் சந்தோஷமாக உள்ளது. உங்கள் அக்கறைக்கு மிக்க நன்றி” என ட்விட்டர் வாயிலாக பதிலளித்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
🤣🤣🤣🤣🤣 hey c’mon.. don’t be mean now..🥲 even if you want AURA to travel with me.. SHE doesn’t want to travel around with me..🤣🤣 she’s very happy in Hyderabad..🥲🥲 thankyou for your concern @Mirchi9 ❤️ https://t.co/c2RTL9I2kG
— Rashmika Mandanna (@iamRashmika) June 24, 2022