Viral Video: பைக்கில் பின் தொடர்ந்த ரசிகர்கள்.. காரை நிறுத்தி திட்டிய ராஷ்மிகா.. ஆனா என்ன சொல்லிருக்காங்க தெரியுமா?
தனது முதல் படமான கன்னட மொழியில் வெளியான கிரீக் பார்ட்டி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ரஷ்மிகா மந்தனா. இப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் செம ஹிட் அடித்த நிலையில், ராஷ்மிகாவிற்கு முதல் படமே வெற்றி படமாக அமைந்து விட்டது.
அதனைத் தொடர்ந்து, கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் கமிட் ஆகி அடுத்தடுத்து நடிக்கத் தொடங்கினார். தெலுங்கு மொழியில் இவர் கதாநாயகியாக நடித்து வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் இவரை பேன் இந்திய லெவல் பேமஸ் செய்தது. அதில் வரும் பாடல்கள் இவரது நடிப்பு என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தது.
இதனால், வெகு சில படங்களிலேயே முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக மாறிவிட்டார் ராஷ்மிகா. தமிழில், சுல்தான் திரைப்படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமானார். புஷ்பா படத்தில் இவரது வித்தியாசமான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.
இந்தியில் அமிதாப் பச்சனுடன் குட் பாய், சித்தார்த் மல்கோத்ராவுடன் மிஷன் மஜ்னு, அனிமல், தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் புஷ்பா 2, தமிழில் விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்திலும் நடித்து வருகிறார்.
இவ்வாறு கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என படு பிசியாக இருக்கும் ராஷ்மிகா, வின் வீடியோ சமூக வலைதளங்கில் வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில் காரில் சென்று கொண்டிருந்த ராஷ்மிகா மந்தனாவை சில இளைஞர்கள் மிகவும் ஆபத்தான முறையில் ஹெல்மெட் அணியாமல் பைக் ரைட் செய்து இவரை பின் தொடர்ந்து சென்றுள்ளனர். காண வந்தவர்களை பார்த்தவுடன் உடனடியாக ஹெல்மெட் அணியுங்கள் என ரஷ்மிகா கூறியுள்ளது பாராட்டுக்களை பெற்று வருகிறது.
I Still Wounder , How one can hate a Human being Like Our @iamRashmika 🥺🤌pic.twitter.com/i0kaeVB3Af
— × Roвιɴ Roвerт × 🕊️ (@PeaceBrwVJ) December 25, 2022