அனுஷாவாக ராஷி கண்ணா.. வீடியோவாக கதாபாத்திரத்தை அறிமுகம் செய்த திருச்சிற்றம்பலம் படக்குழு !

Rashi khanna introduced as anusha in thiruchitrambalam movie

யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் போன்ற படங்களை தனுஷ் வைத்து இயக்கி வெற்றி படங்களாக கொடுத்த இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’. இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

Rashi khanna introduced as anusha in thiruchitrambalam movie

இப்படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பிரகாஷ் ராஜ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். படத்தின் ஷூட்டிங் பணி முடிந்து பின்னணி பணிகள் நடந்து வருகிறது.

Rashi khanna introduced as anusha in thiruchitrambalam movie

கடந்த சில நாட்களுக்கு முன், இப்படத்தில் இடம் பெரும் சில காட்சிகள் இணையதளத்தில் வெளியானது. இந்த காட்சிகளில், திருவிழாவில் தனுஷுடன் நித்யா மேனன் நடனமாடும் காட்சிகளும், ராஷி கண்ணா மற்றும் தனுஷ் இருக்கும் ஒரு காட்சியும் வெளியானது.

வேலையில்லா பட்டதாரி படத்திற்கு பிறகு ஒன்றாக இணையாத நிலையில், திருச்சிற்றம்பலம் படத்தில் DNA கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

Rashi khanna introduced as anusha in thiruchitrambalam movie

இந்நிலையில், திருச்சிற்றம்பலம் படத்தின் அப்டேட் இன்று வரும் என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. பைக் மற்றும் உணவு டெலிவரி பார்சல் பேக்குடன் போஸ்டர் வெளியிட்டுள்ள நிலையில், தனுஷ் இந்த படத்தில் உணவு டெலிவரி பாயாக நடித்துள்ளாரா? என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்ஸ் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Rashi khanna introduced as anusha in thiruchitrambalam movie

தொடர்ந்து தனுஷின் படங்கள் ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் ஆகி வரும் நிலையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பு என்பதால் திருச்சிற்றம்பலம் கன்ஃபார்மாக தியேட்டரில் வெளியாகும் என தனுஷ் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். படத்தின் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றாக வெளியாகவிருப்பதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

Rashi khanna introduced as anusha in thiruchitrambalam movie

இப்போது, ​​ராஷி கண்ணா நடித்த கதாபாத்திரத்தின் சிறிய கிளிப்பை திரைப்பட தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். படத்தின் நாயகிகளில் ஒருவரான ராஷி கண்ணா, அனுஷா என்ற பள்ளி தோழி கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக அறிமுகப்படுத்தியுள்ளனர்.

Share this post