'ரஞ்சிதமே' பாடலில் இப்டி மோசமான வரிகள்? பொறுப்புணர்வு இல்லையா? பாடலுக்கு கிளம்பிய எதிர்ப்பு!
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து, விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் தளபதி66. தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் திரைப்படம் வாரிசு.
மேலும், முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. பின்னர், இப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ஷூட்டிங் நடந்தது. இப்படத்தில் நடிகர் பிரபு, பிரகாஷ் ராஜ், நடிகை சங்கீதா, பிக் பாஸ் மூலம் பிரபலம் அடைந்த பிரபல மாடல் அழகியான சம்யுக்தா, ஷ்யாம், யோகி பாபு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் என நடந்து வந்தது. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்க்ஷன் பணிகள் நடந்து வருகிறது. தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரு மொழிகளில் உருவாகி வரும் நிலையில், இப்படம் மூலம் நேரடியாக டோலிவுட்டிற்கு என்ட்ரி கொடுக்கிறார் விஜய்.
வாரிசு படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், படத்தின் முதல் சிங்கள் ரொமான்டிக் பாடலான ‘ரஞ்சிதமே’ பாடல் வெளியானது. தமன் இசையமைத்துள்ள இந்த பாடலுக்கு, விவேக் லிரிகள் வரிகளை எழுதியுள்ளார். தளபதி விஜய் மற்றும் MM மானஸ்வி ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர்.
‘ரஞ்சிதமே’ பாடல் நேற்று வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், பல படங்களின் மெட்டை காப்பி அடித்தே இந்த ஒரு பாடலை தமன் உருவாகியுள்ளதாக பல்வேறு விமர்சனங்களும் எழுந்து வருகிறது. தற்போது இந்த பாடலுக்கு எதிர்ப்புகளும் கிளம்பி உள்ளது.
ரஞ்சிதமே பாடலில் இடம்பெற்றுள்ள ‘உச்சு கொட்டும் நேரத்திலே உச்சகட்டம் தொட்டவளே’ என்ற வரிகள் தான், இந்த சர்ச்சைக்கு காரணம். இந்த வரிகளின் உண்மையான அர்த்தம் தெரியாமலேயே பல சிறுவர்கள், இந்த வரிகளை பாடி வருவதாக நெட்டிசன்களும், சமூக ஆர்வலர்களும் சமூக வலைத்தளத்தில் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் விஜய் போன்ற பெரிய நடிகர்கள், தங்களுடைய படங்களில் இடம்பெறும் வார்த்தைகள் கூட எப்படி உள்ளது என ஆராய்ந்து பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் என்கிற கருத்தையும் முன் வைத்து வருகிறார்கள். இந்த விஷயம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.