Viral Video: 'பிரெஸ் மீட்ல எங்க ரிப்போட்டர் அந்த கேள்விய கேட்டதற்கு மணிரத்னம் மலிப்பிட்டாரு' – ரங்கராஜ் பாண்டே.
பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் இரண்டு பாகங்களாக திரைப்படம் இயக்கி வருகிறார் இயக்குனர் மணிரத்னம். இதன் முதல் பாகமான பொன்னியின் செல்வன் 1, இன்று (30.09.2022) உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.
சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், பிரபு, ஜெயராம், விக்ரம் பிரபு, கிஷோர், லால், ரஹ்மான், ஷோபிதா துலிபாலா உள்ளிட்ட பல நட்சத்திர பிரபலங்கள் நடித்துள்ளனர்.
பல ஆண்டுகளாக பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்க வேண்டும் என ஏரளமான திரை பிரபலங்கள் கனவு கண்ட நிலையில், அதனை மணிரத்னம் சாதித்துக் காட்டி உள்ளார். மேலும், இந்த படத்தின் ட்ரைலர், பாடல்கள் உள்ளிட்ட அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இன்று திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
திரைப்படத்தின் ரிலீசிற்கு முன்னர், ஒவ்வொரு மாநிலத்திலும் படத்தை விளம்பரம் செய்யும் பணியில் படக்குழு ஈடுபட்டு இருந்தனர். இந்நிலையில் பொன்னியின் செல்வன், பொன்னியின் செல்வன் ட்ரைலரில் வந்த ‘நாராயணா’ வார்த்தை குறித்து ரங்கநாதன் பாண்டே அளித்து இருக்கும் பேட்டி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, ட்ரைலரில் நம்பியாக நடித்து இருக்கும் ஜெயராம் ஒரு காட்சியில் ‘ஐயயோ’ என அலறி இருப்பார். இந்த வசனம் தான் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இதற்கு காரணம், இதே போல மற்ற மொழிகளில் வெளியான ட்ரைலரில் ‘ஐயயோ’ விற்கு பதிலாக ‘நாராயணா’ என்று கூறி இருப்பார் ஜெயராம். ஆனால், தமிழில் மட்டும் இருப்பார் ‘நாராயணா’ என்று சொல்லாமல் ‘ஐயயோ’ கூறியது ஏன் என்று பலர் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். மேலும், சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இதுகுறித்து மணிரத்னத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர் ‘நாராயாணா, இப்படி ஒரு கேள்விக்கு பதில் சொல்லனுமா ? நீங்கள் படம் பாருங்க. படம் முழுதும் நாராயணா என்று தான் சொல்வார் என்று கூறி இருந்தார்.
இந்நிலையில், இது குறித்து நடிகரும், பத்திரிகையாளருமான ரங்கநாதன் பாண்டே கூறியிருந்தது, பொன்னியின் செல்வன் ஒரு புதினம். ஐந்து மொழிகளில் படம் எடுத்து, நான்கு மொழிகளில் மொழிகளில் நாராயணா என்று சொல்லி, ஒரு மொழியில் மட்டும் ஐயயோ சொல்வது என்ன கணக்கு? அவர் என்னவோ நாராயணா என்று சொல்கிறார், இவர் என்னவோ அய்யய்யோ என்று சொல்கிறார்.
என்னதான் நடக்குது. இந்த கேள்வியை பிரஸ்மீட்டில் சாணக்கியர் டீமில் இருந்து ஒருவர் தான் மணிரத்தினத்திடம் கேள்வி எழுப்பியிருந்தோம். அவர் நாராயணா என்று சொல்லி மலிப்பி விட்டு சென்று விட்டார். உண்மையான காரணத்தை சொல்லவில்லை. இதனால் சிலர் இதற்கு எதிராக திருப்பிவிட்டார்கள் என்று மணிரத்தினத்தை தாக்கி ரங்கநாதன் பாண்டே அளித்து இருக்கும் பேட்டி வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது.
பொன்னியின் செல்வன் : எல்லா மொழிகளிலும் "நாராயணா" தமிழில் மட்டும் 'ஐய்யாய்யோ' ஆகிறது..🤔😤 pic.twitter.com/ufzCKILa39
— SivRam ⚜️ (@Rajan1570) September 18, 2022
எல்லா மொழிகளிலும் "நாராயணா" தமிழில் மட்டும் 'ஐய்யாய்யோ' ஏன் - #maniratnam Reveals #PonniyinSelvan pic.twitter.com/jl5l0Mr8Jj
— chettyrajubhai (@chettyrajubhai) September 21, 2022