என்ன திடீர்னு இப்டி பேசிக்குறாங்க..? ரம்யா பாண்டியன் - சூரி குறித்து வெளியாகி வைரலாகும் வீடியோ !

Ramya pandian soori talks don dialogue video getting viral on social media

அரசியல் சார்ந்த கதையை எதிரொலிக்கும் வகையில் 2016ம் ஆண்டு வெளியான ‘ஜோக்கர்’ திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். அந்த ஆண்டிற்கான ‘தேசிய விருதை’ இப்படம் பெற்றது. இதனைத் தொடர்ந்து, சமுத்திரக்கனிக்கு ஜோடியாக இரண்டு குழந்தைகளுக்கு தாயாக போல்ட் ஆன முக்கிய கதாபாத்திரத்தில் ‘ஆண் தேவதை’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

Ramya pandian soori talks don dialogue video getting viral on social media

ஆனால், போறாத காலம் திரைப்படம் இரண்டும் நல்ல வரவேற்பை பெற்றாலும், இவர் பெயர் பெரிதும் புகழ் பெறவில்லை. வெற்றித் திரைப்படங்கள் இரண்டு கை கொடுக்காத நிலையில், கேசுவலாக, மொட்டை மாடியில் இவர் செய்த கிளாமர் போட்டோஷூட் ஓவர் நைட்டில் தென்னிந்திய அளவில் பிரபலம் அடைய செய்தது.

Ramya pandian soori talks don dialogue video getting viral on social media

போட்டோஷூட் புகழ் அடைந்த போதிலும், மக்கள் வரவேற்பு மட்டுமே இவருக்கு கிடைத்தது. பட வாய்ப்புகள் சரிவர கிடைக்காமல் போவதற்கு காரணம் தெரியவில்லை. விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி, கலக்க போவது யாரு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதன் மூலம், டிவி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதனைத் தொடர்ந்து, இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது.

Ramya pandian soori talks don dialogue video getting viral on social media

நிகழ்ச்சியில் கலப்படமான விமர்சனங்கள் பெற்றாலும், ஆர்மிகள், fan பாலோயர்ஸ் யாரும் இவரைக் கைவிடவில்லை. தற்போது, தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் ஒவ்வொரு திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். தற்போது இடும்பன் காரி, நண்பகல் நேரத்து மயக்கம் உள்ளிட்டவற்றில் ஒப்பந்தமாகியுள்ள இவர் முகிலன் என்னும் வெப் சீரிஸிலும் நடித்துள்ளார்.

Ramya pandian soori talks don dialogue video getting viral on social media

சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் சிவகார்த்திகயேன், பிரியங்கா மோகன், சிவாங்கி, எஸ் ஜே சூர்யா, சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வெளியான திரைப்படம் டான். சுமார் 125 கோடிகளை பாக்ஸ் ஆபிஸாக பெற்ற இப்படம் நல்ல விமர்சனங்களையும் பெற்றது. இதில் இடம்பெற்று இருந்த தந்தை செண்டிமெண்ட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருந்தது. குறிப்பாக சூரி மற்றும் சிவகார்த்திகேயனின் கொரியன் கலந்த டயலாக்குகள் மிகவும் பிரபலமானது. இது குறித்தான ரீல்ஸ்களும் அதிக அளவில் ட்ரெண்ட் ஆனது.

Ramya pandian soori talks don dialogue video getting viral on social media

இந்நிலையில், தற்போது சூரி உடன் டான் படத்தின் ஃபேமஸ் டயலாக்கை பேசி அதன் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Share this post