Viral Pic: ஜெயிலர் Glimpse வீடியோவில் இத கவனிச்சீங்களா? அப்போ லதா ரஜினிகாந்த் இடத்தில் ரம்யா கிருஷ்ணன்?

தமிழ் திரையுலகை பொருத்தவரை சிவாஜி மற்றும் எம்ஜிஆர் அவர்கள் வரிசையில் நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் வைத்திருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களையே. அவரது ஸ்டைல், பேச்சு, நற்குணம் என அனைத்திற்கும் ரசிகர் கூட்டம் என்ன படையே உள்ளது என்பது தான் உண்மை.
சூப்பர்ஸ்டாருக்கு நேற்று பிறந்தநாள் என்பதனால், ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அவரை குறித்த பதிவுகள், புகைப்படங்கள், throwback வீடியோக்கள் என பதிவிட்டு கொண்டாடி வந்தனர். இவரது பிறந்தநாளுக்கு, நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். நேற்று ரஜினிகாந்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக இப்படத்திலிருந்து glimpse டீசர் வீடியோ ஒன்று வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இந்த glimpse டீசர் வீடியோவில் இடம்பெறும் காட்சி ஒன்றில் ரஜினி மற்றும் அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இடம்பெறுகிறது. ஒருவேளை ரஜினி - லதா ரஜினிகாந்தின் புகைப்படத்தில் சற்று பார்ப்ஃபிங் செய்து லதா ரஜினிகாந்திற்கு பதில் ரம்யா கிருஷ்ணன் இருப்பாரோ என்றும், அல்லது ஒரிஜினல் போட்டோ வைத்த லதா ரஜினிகாந்திற்கு ஒரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கலாம் எனவும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.