சொன்ன task'ஐ செய்ய மறுத்த போட்டியாளர்.. கடுப்பான ரம்யா கிருஷ்ணன்.. வைரலாகும் வீடியோ !
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும், தொடர்களும் மக்கள் பேராதரவையும் வரவேற்பையும் பெறுவது வழக்கம். அப்படி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களை தேர்வு செய்து போட்டியாளராக வைத்து விஜய் டிவி BIGG BOSS ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.
அவ்வாறு, முதல் சீசனில் அனிதா சம்பத் மற்றும் ஷாரிக் இருவரும் டைட்டிலை தட்டி சென்றனர். இந்நிலையில் முதல் சீசனில் மக்கள் அளித்த வரவேற்பை கண்டு இரண்டாவது சீசனை தொடங்கிய இந்த நிகழ்ச்சிக்கும் மக்கள் பலத்த வரவேற்பினை பெற்று வருகிறது.]
போட்டியாளர்களாக, வேல்முருகன் - இசைவாணி, ஐக்கி - தேவ், அபிஷேக் - ஸ்ருதி ,பாவனி - அமீர் ,ஹாரத்தி - கணேஷ் ,சுஜா - சிவகுமார் மற்றும் பல பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனத்தில் அசத்தி வருகின்றனர். ஜோடிகள் அனைவரும் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே தங்களது சிறப்பான நடனத்தினை காண்பித்து வருகின்றனர்.
கலகலப்பு, சிரிப்பு, நகைச்சுவை என ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியின், இந்த வார பிக்பாஸ் ஜோடிகள் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் போட்டியாளர்களுக்கு எந்த ஜோடிக்கு இறுதி போட்டியில் முன்னேறுவதற்கு தகுதி இருக்கிறது, யாருக்கு தகுதி இல்லை என குறிப்பிடும்படி போட்டியாளர்களிடம் கேட்கப்படுகிறது.
இதில் ஐக்கி மற்றும் தேவ் ஜோடி கலந்துகொண்ட போது, தேவ் தகுதி இல்லாத நபர்களை கூற மறுக்க, நடுவராக உள்ள ரம்யாகிருஷ்ணன் இது ஒரு விளையாட்டு, இதனை சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என கோபமாக கூறும் ப்ரோமோ வீடியோ வைரலாகி வருகிறது.