அசல் இல்லாத குறையை தீர்க்க துவங்கிய Ram.. விமர்சனத்திற்கு உள்ளான வீடியோ..
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 6ல் யூடியூபர் ஜி.பி.முத்து, திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர், நடிகை ஆயிஷா, மாடல் ஷெரினா, நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் பாடகர் ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே.மகேஸ்வரி, வி.ஜே. கதிரவன், மாடல் குயின்சி, மாடல் நீவா, பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி, மைனா நந்தினி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
21 போட்டியாளர்களில் இப்போது 18 போட்டியாளர் உள்ளார்கள். கானா பாடகர் அசல் கோலார், மெட்டி ஒலி சாந்தி உள்ளிட்டோர் ஏவிக்ட் ஆகிவிட்டனர். கடந்த சில வாரங்களாக அசல் செய்த சில சேட்டைகள் குறித்து சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வந்தன. அவர் பெண்களிடம் தவறாக நடந்துகொள்கிறார் என்பது மக்களின் பெரிய கோபமாக உள்ளது. பெண்களிடம் சில்மிஷம் செய்துவரும் அசல் கோளாறு, தினமும் ஒவ்வொரு பெண் போட்டியாளர்களிடம் அத்துமீறி வருவதாக குற்றச்சாட்டுக்கள் அடுக்கப்பட்டு வந்தது.
இது குறித்து நேரடியாக கமல் கூறாமல், சூசகமாக சொல்லியும் திருந்தாமல், மீண்டும் தன்னுடைய லீலைகளை செய்து வந்தார். மேலும், அசல் கோளாறு மற்றும் நிவா ஈடுபட்டு வந்த காதல் லீலைகள் எல்லைமீறி வந்தது. நிவாவின் தோலை கடித்து திணறுவது போலவும், கைகளை கடித்து, நிவாஷினி படுக்கையில் அசலுடன் செய்யும் சில செயல்கள் முகம் சுளிக்க வைக்கும் அளவிற்கு எல்லைமீறி போய் வந்தது. இதனால், சென்ற வாரம் எவிக்ட் ஆனார்.
இந்நிலையில், அசல் செய்த வேலையை பிக்பாஸ் வீட்டில் இன்னொரு போட்டியாளர் செய்து வரும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அவர் வேறு யாரும் இல்லைங்க, நம்ம ராம் ராமசாமி தான். ராம் ஒரு மாடல் ஆவார். பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து இவர் பெண்களிடம் ஸ்வீட், நிகழ்ச்சியில் அமைதியாகவும் டீல் செய்து கொண்டு வருகிறார். தற்போது இவர் ஜனனியிடம் எல்லை மீறி இருக்கிறார். தற்போது அந்த வீடியோவை தான் நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் பதிவிட்டு கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
Ram Ennada pandra😳😳😳#BiggBoss #BiggBossTamil6 #BiggBossTamil pic.twitter.com/RZaa6UqbPq
— BIGG BOX TROLL (@drkuttysiva) October 30, 2022
#Asal thapunu solra yethana peru eni #Ram activities aha note panranga nu pakalam..ethu first time ila by ram..#BiggBossTamil6 pic.twitter.com/qp64u2I0rf
— Dr.Ilavarasi (@Ilavarisirk) October 30, 2022