ராஜமௌலியை கொல்ல திட்டமிட்டுள்ளதாக போதையில் உளறிய பிரபல தமிழ் பட இயக்குனர்.. சர்ச்சையான பதிவு..!
தெலுங்கு திரையுலகில் பிரம்மாண்ட இயக்குனர் என அழைக்கப்படுபவர் இயக்குனர் ராஜமவுளி. இவர் இயக்கத்தில் நான் ஈ, மகதீரா, பாகுபலி 1 & 2, RRR உட்ப்பட பல திரைப்படங்கள் இவருக்கு வெற்றி வாகை பெற்றுத்தந்தது. இதனால், இந்திய திரையுலகம் மொத்தமும் ஸ்தம்பித்து திரும்பி பார்க்கும் வகையில் திரைப்படங்கள் படைத்திருந்தார்.
இவர் இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியாபட், அஜய் தேவகன், ஸ்ரேயா போன்ற டாப் பிரபலங்கள் நடிப்பில் வெளியான RRR திரைப்படம் மாபெரும் வசூல் சாதனையை படைத்தது. கடந்த 11ம் தேதி இப்படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு குத்து பாடலுக்கு கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டது. அப்போது அந்த விழாவில் பங்கேற்ற பிரமாண்ட இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன், ஆர்.ஆர்.ஆர் பட குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் அவர் இயக்குனர் ராஜமௌலியிடம் “ உங்களுடைய படம் மிக நன்றாக இருந்தது. உங்களுக்கு Hollywoodல் படம் இயக்க ஆர்வமாக இருந்தால் அது குறித்து நாம் பேசலாம்” என்று கூறியிருந்தார். இதற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் ராஜமௌலிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்திய பிரபல இயக்குனர்களில் ஒருவரான ராம் கோபால் வர்மா ட்வீட் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் “ராஜமௌலி சார், தயவு செய்து உங்கள் பாதுகாப்பை அதிகரித்து கொள்ளுங்கள். பல இயக்குனர்கள் உங்கள் மேல் கொலை வெறியில் உள்ளனர், அதில் நானும் ஒருவன். நான் மது அருந்தி விட்டு போதையில் இருப்பதால் உண்மையை கூறிவிட்டேன்” என்று ட்வீட் செய்துள்ளார்.