"நடிகையின் காலை வருடி.. முத்தமிட்ட விவகாரம்.." மோசமான விளக்கம் கொடுத்த ராம்கோபால் வர்மா!
அரசியல், சினிமா போன்றவற்றை பத்தி சர்ச்சை விமர்சனங்களை அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுவது ராம் கோபால் வர்மா வழக்கம். மேலும், சில திரைப்படங்களிலும் controversy திரைக்கதைகளால் பெயர் பெற்றவர். ரங்கீலா, அமிதாப் பச்சனின் சர்கார் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் ராம் கோபால் வர்மா. சூர்யா நடிப்பில் ரத்த சரித்திரம் என்ற படத்தையும் இயக்கினார்.
பிரபலமான இயக்குனராக திகழ்ந்த இவர் அண்மைகாலமாக ஆபாச பட இயக்குனர் ரேஞ்சில் படங்களை இயக்கி வருகிறார். RRR படத்துக்கு போட்டியாக ரிலீஸ் செய்கிறேன் என ப்ரமோஷனுடன் ஆரம்பித்த அவரது லெஸ்பியன் படமான ‘டேஞ்சர்ஸ்’ எதிர்ப்புகள் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இதனையடுத்து வரும் 9ம் தேதி இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் ராம் கோபால் வர்மா. அப்சரா ராணி மற்றும் நைனா கங்குலி நடிப்பில் லெஸ்பியன் படமாக ‘டேஞ்சர்ஸ்’ படத்தை இயக்கியுள்ளார்.
இந்த நடிகைகளுடன் பல சர்ச்சை வீடியோக்களை வெளியிட்ட ராம் கோபால் வர்மா, தற்போது பிக் பாஸ் தெலுங்கு பிரபலமான ஆஷு ரெட்டியின் கால்களை பிடித்து மசாஜ் செய்யும் போட்டோவை வெளியிட்டுள்ளார். இவரது உடலில் டேஞ்சரஸ் மார்க் என்பதை ரிவீல் செய்யும் வீடியோவை விரைவில் வெளியிடுகிறேன் என ஆபாசமாக கேப்ஷன் போட்டும் பரபரப்பை கிளப்பியிருந்தார்.
இதனையடுத்து ஆஷு ரெட்டி தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்த வீடியோவில், அவரது கால் பாதத்தை ராம் கோபால் வர்மா முத்தமிடும் காட்சி மட்டுமின்றி அவரது பாதத்தை நாக்கால் வருடி ராம் கோபால் வர்மா செய்த செயல் அதிர்ச்சியை கிளப்பியது. இதனையடுத்து நெட்டிசன்கள் பலரும் ராம் கோபால் வர்மாவை கண்டமேனிக்கு திட்டி தீர்த்து வந்தனர். மேலும் ஆஷு ரெட்டியை குறிப்பிட்டு, இப்படி ஒரு அழகியை படைத்ததற்கு கடவுளுக்கு நன்றி என்ற கூறியவாறே அவரது கால் பாதத்தை நாக்கால் வருடி, ராம் கோபால் இந்த செயலை செய்திருக்கிறார்.
இணையத்தில், தாறுமாறாக வரும் விமர்சனத்திற்கு ட்விட்டரில் விளக்கம் கொடுத்த ராம் கோபால் வர்மா, நடிகை அப்சரா ராணி மீது நாய் அமர்ந்து இருக்கும் போட்டோவை பகிர்ந்து, நடிகை அஷுரெட்டியின் காலடியில் அமர்ந்திருந்தபோது அப்சரா ராணியின் நாய் தான் நினைவுக்கு வந்தது என்றும், காலுக்கு முத்தம் கொடுப்பதை அப்சராவின் நாயிடம் இருந்து கற்றுக்கொண்டேன் என்று பதிவிட்டுள்ளார். ராம்கோபாலின் இந்த விளக்கத்தை பார்த்த ரசிகர்கள், இப்படி ஒரு மோசமான விளக்கமா என கேட்டு நொந்து போயுள்ளனர்.
The DANGEROUS emotion I felt when sitting at the feet of #AshuReddy is what I learnt from @_apsara_rani ‘s DOG whose insta I’d is https://t.co/Go23M7w5Kg pic.twitter.com/ilwPwjMdYd
— Ram Gopal Varma (@RGVzoomin) December 9, 2022