குழந்தை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு விருதா ? ராம் சரண் மனைவிக்கு சத்குரு கொடுத்த பரபரப்பு பதில் !

Ram charan wife about baby birth and sadhguru reply video getting viral on social media

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி அவர்களின் மகன் ராம் சரண் தற்போது தற்போது தெலுங்கு மொழி திரையுலகில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். பல திரைப்படங்களில் இவர் நடித்த போதிலும், மகதீரா திரைப்படத்தில் இவர் நடித்ததன் மூலம் தென்னிந்திய லெவல் பேமஸ் ஆகிவிட்டார்.

Ram charan wife about baby birth and sadhguru reply video getting viral on social media

கிட்டத்தட்ட 10திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், சமீபத்தில் ஜூனியர் NTR உடன் RRR என்னும் பான் இந்தியா படத்தில் நடித்திருந்தார். அப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஷங்கர் இயக்கத்தில் RC15 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Ram charan wife about baby birth and sadhguru reply video getting viral on social media

2012ம் ஆண்டு ராம் சரண், உபாசனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ராம்சரண் - உபாசனா திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகியும் இவர்கள் இன்னும் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை.

Ram charan wife about baby birth and sadhguru reply video getting viral on social media

இந்நிலையில், ‘நான் திருமணம் செய்து 10 வருடங்கள் ஆகிறது. மகிழ்ச்சியாக தான் இருக்கிறேன். குழந்தைகள் பெற்று கொள்ளவில்லை. ஆனால் எல்லோரும் என்னுடைய RRR பற்றி கேள்வி கேட்கிறார்கள். Relationship, Ability to Reproduce, Role in Life ஆகியவற்றை பற்றி எல்லோரும் கேட்கிறார்கள் என ராம் சரண் மனைவி தெரிவித்து இருக்கிறார்.

Ram charan wife about baby birth and sadhguru reply video getting viral on social media

அதற்கு பதில் அளித்த சத்குரு உபஸ்னாவுக்கு விருது கொடுப்பதாக கூறி இருக்கிறார். “குழந்தை பெற முடிந்தும் வேண்டாம் என சொல்லும் பெண்களுக்கு விருது கொடுக்கிறேன். நீங்க புலியாக இருந்தால் நிச்சயம் குழந்தை பெற வேண்டும் என சொல்ல இருப்பேன். ஏனென்றால் புலி அழியும் கட்டத்தில் இருக்கிறது.

Ram charan wife about baby birth and sadhguru reply video getting viral on social media

ஆனால் மனிதன் அப்படி இல்லை, இன்னும் 30 - 35 வருடங்களில் 10 பில்லியன் என்ற மைல்கல்லை மக்கள் தொகை தொட்டுவிடும். அப்படி இருக்க மக்கள் தொகை குறைந்தால் குளோபல் வார்மிங் குறையும்” என தெரிவித்து இருக்கிறார். அதற்கு உபஸ்னா “என் அம்மாவும், மாமியாரும் உங்களுக்கு கண்டிப்பாக கால் பண்ணுவாங்க” என காமெடியாக கூறி இருக்கிறார்.

இது குறித்து ராம்சரண் பேட்டி ஒன்றில் கூறிய போது, சிரஞ்சீவியின் வாரிசாக மக்களை மகிழ்விக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. எனக்கு என்று சில இலக்குகள் இருக்கிறது. அதேபோல் என்னுடைய மனைவிக்கும் இலக்குகள் இருக்கின்றது. குழந்தை பிறந்து விட்டால் நாங்கள் இருவரும் இலக்கில் இருந்து விலக வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதனால் நாங்கள் தற்போது குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை. சில வருடங்கள் கழித்து இது குறித்து யோசிப்போம் என்று கூறியிருந்தார்.

Share this post