திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு பின் குட் நியூஸ் சொன்ன ராம் சரண்.. சூப்பர் குஷியில் சிரஞ்சீவி

ram charan and upasana expecting their first baby soon and announcement getting viral

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி அவர்களின் மகன் ராம் சரண் தற்போது தற்போது தெலுங்கு மொழி திரையுலகில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். பல திரைப்படங்களில் இவர் நடித்த போதிலும், மகதீரா திரைப்படத்தில் இவர் நடித்ததன் மூலம் தென்னிந்திய லெவல் பேமஸ் ஆகிவிட்டார்.

ram charan and upasana expecting their first baby soon and announcement getting viral

கிட்டத்தட்ட 10திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், சமீபத்தில் ஜூனியர் NTR உடன் RRR என்னும் பான் இந்தியா படத்தில் நடித்திருந்தார். அப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஷங்கர் இயக்கத்தில் RC15 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ram charan and upasana expecting their first baby soon and announcement getting viral

2012ம் ஆண்டு ராம் சரண், உபாசனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ராம்சரண் - உபாசனா திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகியும் இவர்கள் இன்னும் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன் அளித்த பேட்டி ஒன்றில் கூட தாங்கள் குழந்தை பெற்றுக் கொள்ளப்போவதில்லை என தடாலடியாக பேசி இருந்தார் ராம்சரணின் மனைவி.

ram charan and upasana expecting their first baby soon and announcement getting viral

தாங்கள் இருவரும் தற்போது தங்களது இலக்கை நோக்கி நகர்ந்து வருவதாகவும், இந்த சமயத்தில் குழந்தை பெற்றுக்கொண்டால் இலக்கின் மீதான கவனம் சிதறிவிடும் என்பதனால் தற்போதைக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் ஐடியா இல்லை என தெரிவித்து இருந்தார். உபாசனாவின் இந்த பேட்டி மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது.

ram charan and upasana expecting their first baby soon and announcement getting viral

இந்நிலையில், அந்த பேட்டி கொடுத்த ஐந்தே மாதத்தில் குட் நியூஸ் சொல்லி உள்ளனர் ராம்சரண் - உபாசனா ஜோடி. தாங்கள் இருவரும் விரைவில் பெற்றோர் ஆகவுள்ள தகவலை வெளியிட்டு இருவரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர். தான் தாத்தா ஆகப்போவதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் நடிகர் சிரஞ்சீவி, ஹனுமனின் ஆசியுடன் உபாசனாவும், ராம்சரணும் தங்களது முதல் குழந்தையை வரவேற்க உள்ளார்கள் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் சிரஞ்சீவி. இதையடுத்து ராம்சரண் - உபாசனா ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

ram charan and upasana expecting their first baby soon and announcement getting viral

Share this post