ரகுல் ப்ரீத் சிங்கிற்கு விரைவில் திருமணம்.. போட்டோ பதிவிட்டு காதலரை அறிமுகப்படுத்திய ரகுல் ப்ரீத் சிங்!

7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தின் கன்னட ரீமேக் திரைப்படமான கில்லி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் நடிகை ராகுல் ப்ரீத் சிங். இதனைத் தொடர்ந்து, தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். தமிழ் மொழியில், யுவன், தடையற தாக்க, புத்தகம் போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.
பின்னர், என்னமோ ஏதோ திரைப்படத்தில் கவுதம் கார்த்திக் ஜோடியாக நடித்தார். அடுத்தடுத்து, தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்த இவர், தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தார். இதில் இவரது க்யூட் நடிப்பு, லுக் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர், தேவ், NGK போன்ற திரைப்படங்களில் நடித்தார்.
தற்போது, தமிழில் அயலான் மற்றும் இந்தியன் 2 திரைப்படங்களில் நடித்து வரும் ராகுல் ப்ரீத் சிங், ஹிந்தி திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், தனது கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், தனது காதலருடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். நடிகை ரகுல் ப்ரீ சிங் கடந்த ஆண்டு தன்னுடைய 31வது பிறந்த நாளின் போது, பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான ஜாக்கி பக்னானி ரகுல் கையைப் பிடித்துக் கொண்டு, நடப்பது போல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, ‘நீங்கள் இல்லாத நாட்கள் நாட்கள் போல் தெரியவில்லை, என பதிவிடவே, இவரின் இந்த பதிவுக்கு பதிலளித்த ரகுல் ப்ரீத் சிங், இந்த ஆண்டு நீங்கள் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு என்று பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவை பார்த்து ரசிகர்கள் பலர் இவர்கள் இருவரும் டேட் செய்து வருவதாக கூறி வந்தனர். ஆனால் இது குறித்து இருவரும் அமைதி காத்து வந்தனர். தற்போது வெளிப்படையாக ஜாக்கி பக்னானி பிறந்தநாளை முன்னிட்டு வித்தியாசமாக காதலை வெளிப்படுத்தியுள்ளார் ராகுல் ப்ரீத் சிங். ‘என் வாழ்க்கைக்கு சாண்டா கொடுத்த மிகப்பெரிய பரிசு இவர்தான் என தனது காதலர் ஜாக்கி பக்னானியை அறிமுகப்படுத்தியுள்ளார்.
ஜாக்கி பக்னானி பல படங்களை தயாரித்துள்ளது மட்டுமின்றி சில பாலிவுட் படங்களில் நடித்தும் உள்ளார். இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது எனவும், எனவே தான் காதலை ரகுல் ப்ரீத் சிங் வெளிப்படுத்தியுள்ளார் என கூறப்படுகிறது. இதையடுத்து, ரகுல் ப்ரீத் சிங் - ஜாக்கி பக்னானி ஜோடிக்கு ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.